ADVERTISEMENT
கள்ளக்குறிச்சி : சின்னசேலம் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமினை கலெக்டர் ஷ்ரவன்குமார் ஆய்வு செய்தார்.
சின்னசேலத்தில் உள்ள இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் உள்ள 77 குடும்பங்களில் 277 பேர் வசிக்கின்றனர்.
முகாமில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு பாதுகாப்பான, கவுரவமான, மேம்பாடுத்தப்பட்ட வாழ்க்கையை அமைத்திடவும், அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர பணக்கொடை, ஆடைகள், பாத்திரங்கள், கல்வி உதவித் தொகை ஆகியவைகள் முறையாக வழங்கப்படுகிறதா என்பது குறித்து கலெக்டர் ஷ்ரவன்குமார் நேற்று ஆய்வு செய்தார்.
இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் இல்லவாசிகளின் குடியிருப்புகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சேதமடைந்த குடியிருப்புகளுக்கு மாற்று ஏற்பாடு செய்து தரவும், குடியிருப்புகளில் பழுது நீக்கம் செய்திடவும், அரசுக்கு உரிய முன்மொழிவு அனுப்பிடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
முகாமில் குடிநீர், சாலை வசதிகள், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தங்கு தடையின்றி வழங்கிடவும் அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து முகாமில் வசிக்கும் குடும்பங்களுக்கு தேவையான வீட்டு உபயோக பொருட்களை கலெக்டர் வழங்கினார். ஆய்வின்போது சின்னசேலம் தாசில்தார் கமலக்கண்ணன் மற்றும் துணை தாசில்தார்கள், வருவாய் துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!