ADVERTISEMENT
மயிலம் : மயிலம் அருகே உள்ள நெடி மொழியனூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.
மயிலம் அடுத்த நெடி மொழியனுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் இலவச சைக்கிள் வழங்கும் விழாவிற்கு மயிலம் சேர்மன் யோகேஸ்வரி மணிமாறன் தலைமை தாங்கி மாணவ மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கி பேசினர்.
ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வகுமார், கிஷோர், தனலட்சுமி முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர்இளம் பரிதி வரவேற்றார்.
முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் டாக்டர் மாசிலாமணி, சேதுநாதன், ஒன்றிய செயலாளர் மணிமாறன் வாழ்த்துரை வழங்கினர். பள்ளி துணைத் தலைமை ஆசிரியர் குப்பு முத்துராஜா, பாலசுந்தரம், மாவட்ட பிரதிநிதி சேகர் விவசாயி அமைப்பாளர் பாஸ்கர், பிரபு, பள்ளி ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!