ADVERTISEMENT
கள்ளக்குறிச்சி : அரியலுாரில் அதிகபட்சமாக 6 செ.மீ., மழை பெய்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 9:30 மணியில் இருந்து நள்ளிரவு 1:00 மணி வரை இடி மின்னலுடன் பரவலாக மழை பெய்தது.
அதன்படி, கள்ளக்குறிச்சி-22 மி.மீ., தியாகதுருகம்-20, விருகாவூர்-16, கச்சிராயபாளையம்-17, கோமுகி அணை-23, அரியலுார்-60, கடுவனுார்-51, கலையநல்லுார்-18, கீழ்பாடி-31, மூரார்பாளையம்-14, மூங்கில்துறைப்பட்டு-13, ரிஷிவந்தியம்-12, சூளாங்குறிச்சி-30, வடசிறுவளூர்-35, மணிமுக்தா அணை-30, வாணாபுரம்-19, மாடாம்பூண்டி-29, திருக்கோவிலுார் வடக்கு-47, திருப்பாலபந்தல்-34, வேங்கூர்-13, ஆதுார்-3, எறையூர்-15, உ.கீரனுார்-48 என, மொத்தமாக 600 மி.மீ., மழை பெய்தது.
மாவட்டம் முழுவதும் சராசரி மழையளவு 25 மி.மீ., ஆகும்.
பசு மாடு பலி
சின்னசேலம் அடுத்த உலகியநல்லுார் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் என்பவரது பசு மாடு மின்னல் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!