ADVERTISEMENT
விழுப்புரம் : விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பதற்கான ஊர்வலத்தை முன்னிட்டு விழுப்புரத்தில் ஊர்வலம் செல்லும் பாதையில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகளில் போலீசார் ஈடுபட்டனர்.
விநாயகர் சதுர்த்தியை யொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை இந்து முன்னணி மற்றும் விழா குழுவினர் பலர் வைத்துள்ளனர். இந்த சிலைகள் இன்று (20ம் தேதி) மதியம் 2.00 மணிக்கு மேல் புதுச்சேரி மாநிலம், கடலுார் கடற்கரை பகுதிகளுக்கு வாகனங்களில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நீர் நிலைகளில் விஜர்சனம் செய்ய உள்ளனர்.
இந்த சிலைகளுக்கான வாகன ஊர்வலம் தடையின்றி செல்லும் வகையில், விழுப்புரம் போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் வசந்த் தலைமையிலான போலீசார், நேற்று திரு.வி.க., வீதி, வடக்கு தெரு வழிப்பாதைகளில் உள்ள ஜல்லி கற்களை அகற்றி வாகனங்களில் கொட்டியதோடு, இருப்புறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றினர்.
மேலும், ஊர்வலம் செல்லும் போது மேற்புரத்தில் மின்ஓயர்களில் சிக்கி மின்சாரம் தாக்கி அசம்பாவிதம் ஏதும் ஏற்படாத வகையில், போலீசார், மின்துறை அதிகாரிகளிடம் பேசி ஊர்வலம் செல்லும் பாதையில் அந்த நேரத்தில் மட்டும் மின்சாரத்தை நிறுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!