ADVERTISEMENT
உடுமலை;ஹிந்து மக்கள் கட்சி சார்பில், பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் நேற்று நடந்தது.
குடிமங்கலம் ஒன்றியத்தில், ஹிந்து மக்கள் கட்சி சார்பில், 35க்கும் மேற்பட்ட இடங்களில், விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. நாள் முழுவதும் சிறப்பு பூஜைகள், யாகங்கள் நடத்தப்பட்டன. நேற்று மாலை சிலைகள் விசர்ஜன ஊர்வலம் துவங்கியது.
பெதப்பம்பட்டி நால்ரோடு, உடுமலை நகரம், குட்டை திடல் வழியாக, மடத்துக்குளம் அமராவதி ஆற்றுக்கு ஊர்வலம் சென்றது. அங்கு சிலைகள், விசர்ஜனம் செய்யப்பட்டன. கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!