Load Image
Advertisement

வாகனம் மோதி இளைஞர் பலி

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு அருகே, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், சம்பவ இடத்திலேயே இளைஞர்கள் பலியானார்.

கிணத்துக்கடவு, சிங்கராம்பாளையம் பிரிவை சேர்ந்தவர் கார்த்தி, 28. இவர், நேற்று காலை கிணத்துக்கடவு, கல்லாங்காட்டுபுதுார் அருகே சர்வீஸ் ரோட்டை கடந்து சென்றார்.

அப்போது பொள்ளாச்சியில் இருந்து, கோவை நோக்கி வேகமாக சென்ற அடையாளம் தெரியாத கார், கார்த்தியின் மீது மோதி விட்டு, நிற்காமல் சென்றது.

இதில், படுகாயமடைந்த கார்த்தி சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவல் அறிந்த கிணத்துக்கடவு போலீசார், விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி சென்ற கார் குறித்து, அங்குள்ள சி.சி.டி.வி., காட்சி வாயிலாக தேடி வருகின்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement