ரோடு விரிவாக்க பணிக்காக நாளை மின்தடை
பொள்ளாச்சி:பொள்ளாச்சி- மீன்கரைரோடு விரிவாக்க பணிக்காக, கணபதிபாளையம், கோவிந்தாபுரம் பகுதியில், நாளை, 21ம் தேதி மின்வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
பொள்ளாச்சி - மீன்கரை ரோட்டில், சாலை மேம்பாட்டு திட்டத்தில் விரிவாக்கப்பணி நடக்கிறது. தேவையான இடங்களில் ரோடு விரிவுபடுத்தப்படுகிறது.
இதற்காக, பொள்ளாச்சி கோட்டத்துக்கு உட்பட்ட மார்ச்சநாயக்கன்பாளையம் துணை மின்நிலையத்தில் உள்ள கணபதிபாளையம் மின் பாதையில், ரோடு விரிவாக்க பணிகள் மற்றும் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
எனவே, நாளை, 21ம் தேதி, காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால், பொள்ளாச்சி கோட்டத்துக்கு உட்பட்ட கணபதிபாளையம், பெரியார் நகர், காந்தி ஆசிரமம், கோவிந்தாபுரம், பாப்பாத்திபாளையம் ஆகிய பகுதிகளில், மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது.
இத்தகவலை, பொள்ளாச்சி செயற்பொறியாளர் ராஜா அறிவித்துள்ளார்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!