குடிநீர் வடிகால் வாரியம் முற்றுகை; மக்கள் ஆவேசம்
பொள்ளாச்சி:பொள்ளாச்சி குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, மாக்கினாம்பட்டி ஊராட்சி பொதுமக்கள், குடிநீர் வழங்க மனு கொடுத்தனர்.
பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட, மாக்கினாம்பட்டி ஊராட்சி தலைவர் மாரியம்மாள், துணைத்தலைவர் அழகிரிராஜ், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.
ஊராட்சி சார்பில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
பொள்ளாச்சி அருகே, மாக்கினாம்பட்டி ஊராட்சியில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.முறையாக குடிநீர் வினியோகம் இல்லை என, பொதுமக்கள், ஊராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்துபுகார் தெரிவிக்கின்றனர்.
தற்போது வழங்கும் குடிநீர் அளவு மிகவும் குறைவாக உள்ளதால், பொதுமக்களுக்கு, 15 - 20 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வழங்க முடிகிறது.மேலும், மாதத்தில், 5 - 10 நாட்களுக்கு மேல், குடிநீர் வடிகால் வாரியத்தில் இருந்து வரும் குடிநீர் வினியோகம் தடைபடுவதால் ஊராட்சியில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
குடிநீர் வடிகால் வாரியத்திடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே, மாக்கினாம்பட்டி ஊராட்சிக்கு முறையாக குடிநீர் வழங்க வேண்டும்.
மாக்கினாம்பட்டி ஊராட்சியில், 15வது நிதிக்குழு மானியத்தில் இருந்து, 13 லட்சம் ரூபாய் மின் வாரியத்துக்கும், குடிநீர் வடிகால் வாரியத்துக்கும் செலுத்த உத்தரவு பெறப்பட்டது.
மின் வாரியத்தில் நிலுவை உள்ள தொகையை அரசு, 'ஒன் டைம் செட்டில்மென்ட்' திட்டத்தில் நேரடியாக செலுத்திவிட்டது. எனவே, அந்த முழு தொகையையும் குடிநீர் வடிகால் வாரியத்துக்கு செலுத்த முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, அதிகாரிகளிடம், ஊராட்சி தலைவர் மற்றும் பொதுமக்கள் பேச்சு நடத்தினர். அதிகாரிகள், 'ஊராட்சி நிர்வாகம் குடிநீர் கட்டணம், ஏப்., மாதம் செலுத்தியது. அதன்பின் செலுத்தவில்லை. நிலுவை தொகை அதிகரித்துள்ளதால்குடிநீர் வினியோகம் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் நிர்வாகத்துக்கு தெரிவித்துள்ளோம்,' என்றனர்.
ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், 'நிலுவை தொகை செலுத்த முயற்சி எடுக்கிறோம். குடிநீர்வினியோக அளவை குறைக்காமல் வழங்க வேண்டும்,' என கோரிக்கை விடுத்தனர். இதற்கு, 'உயர் அதிகாரிகளிடம், உங்களது பிரச்னைகள் தெரிவிக்கப்படும். தண்ணீர் முறையாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து, ஊராட்சி நிர்வாகத்தினர், பொதுமக்கள், சப் - கலெக்டரிடமும் மனு கொடுத்து கோரிக்கையை வலியுறுத்தினர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!