குடிமகன்கள் மதுபாட்டில் வீச்சு போலீஸ் கண்காணிப்பு தேவை
உடுமலை;உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களில், 'குடி'மகன்கள், பொது இடங்களில் பாட்டில்களை உடைத்தும், பிளாஸ்டிக் கழிவுகளை விட்டுச் செல்வதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.
உடுமலை நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், 30க்கும் மேற்பட்ட 'டாஸ்மாக்' மதுக்கடைகள் உள்ளன. சில கடைகளில் 'பார்' இல்லாததால், 'குடி'மகன்கள் மதுபாட்டில்களை வாங்கி, ரோட்டோரத்திலேயே அமர்ந்து குடிக்கின்றனர்.
அதேபோல, பாலம், பஸ் ஸ்டாப் நிழற்குடை, பாறைப்பகுதி, விவசாய நிலங்கள் என பல்வேறு இடங்களில் அமர்ந்து மது குடிக்கின்றனர். குடித்து முடிந்ததும், பாட்டில்களை அங்கேயே போட்டு உடைத்து விடுகின்றனர்.
இதனால், சமீப காலமாக, கிராமப்பகுதிகளில் உள்ள பொது இடங்கள், நீர்நிலையை ஒட்டிய பகுதிகளில் காலிபாட்டில்கள் மற்றும் பாட்டில் சிதறல்கள் அதிகளவில் காணப்படுகின்றன. அவற்றோடு பிளாஸ்டிக், பாலித்தீன் தண்ணீர் பாக்கெட்டுகளும் விட்டுச் செல்லப்படுவதால், சுற்றுச்சூழல் பாதிப்படைகிறது.
சிதறிக் கிடக்கும் பாட்டில் துண்டுகள், வாகனங்களை டயர்களை சேதமடையச் செய்கிறது. இவ்வாறு, பிறருக்கு இடையூறாக மது அருந்துவோரை கண்டறிந்து, அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!