ADVERTISEMENT
விழுப்புரம் ; விழுப்புரத்தில் மகளிர் உரிமை தொகை குறுஞ்செய்தி வரப்பெறாதோருக்காக அமைக்கப்பட்ட உதவி மையத்தை கலெக்டர் பழனி ஆய்வு செய்தார்.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மகளிர் உரிமைதொகை குறித்த குறுஞ்செய்தி வராதோர், குறுஞ்செய்தி வந்து வங்கி கணக்கில் பணம் கிடைக்க பெறாதோருக்கு அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தை கலெக்டர் பழனி நேற்று ஆய்வு செய்தார்.
இந்த மையத்தை ஆய்வு செய்த கலெக்டர் பழனி, அங்குள்ள விண்ணப்பதாரர்களிடம் விண்ணப்பத்தின் நிலை குறித்து கேட்டறிந்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) விஸ்வநாதன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அரிதாஸ், மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர் நாராயணமூர்த்தி உட்பட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!