மெல்ல கற்கும் மாணவர்களுக்கு பள்ளியில் சிறப்பு காலாண்டு தேர்வு
உடுமலை;உடுமலை அரசு பள்ளிகளில், மெல்லக் கற்கும் மாணவர்களுக்காக, சிறு வாக்கியங்களை உள்ளடக்கிய வினாத்தாள் தயாரித்து காலாண்டு தேர்வு நடத்தப்படுகிறது.
உடுமலை மற்றும் சுற்றுப்பகுதி அரசு பள்ளிகளில், எழுத்து மற்றும் வாசிப்பு திறன் குறைந்த மாணவர்கள், ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்த பட்சம், 10 பேர் வரை உள்ளனர். இவர்களுக்கு, கற்பித்தல் முறையில், பல புதுமையான முறைகளை, ஆசிரியர்கள் கையாண்டு, மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தி வருகின்றனர்.
தற்போது, காலாண்டு தேர்வு நடத்தப்படும் நிலையில், மெல்ல கற்கும் மாணவர்களுக்காக தனித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி அளவில் சிறு வாக்கியங்களை உள்ளடக்கி வினாத்தாள் தயாரித்து, தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
தலைமையாசிரியர்கள் கூறியதாவது:
ஒவ்வொரு வகுப்பிலும், மெல்ல கற்கும் மாணவர்கள் உள்ளனர். அவர்களுக்கு, சிறு, சிறு வாக்கியங்கள் சொல்லிக் கொடுத்து, புரியும் வகையில் பாடம் நடத்தப்படுகிறது. தற்போது, காலாண்டு தேர்வும், அவர்களுக்கு ஏற்றாற்போல் நடத்தப்படுகிறது.
சிறு வாக்கியங்களை உள்ளடக்கி, வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, 'இரு எழுத்துக்கள் கொண்ட சொற்கள், ஐந்து எழுதுக,' என, அடிப்படை கற்றலை மையமாகக் கொண்டு, உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும் வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, கூறினர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!