Load Image
Advertisement

மகளிர் உரிமைத் தொகைக்கு தேர்வானவர்கள் 91,816 பேர்! மாவட்டத்தில் 3,67,404 பேர் விண்ணப்பித்துள்ளனர்

91,816 people selected for womens rights! 3,67,404 people have applied in the district    மகளிர் உரிமைத் தொகைக்கு தேர்வானவர்கள் 91,816 பேர்! மாவட்டத்தில் 3,67,404 பேர் விண்ணப்பித்துள்ளனர்
ADVERTISEMENT
கள்ளக்குறிச்சி : மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் விண்ணப்ப நிலை குறித்து, கலெக்டர், ஆர்.டி.ஓ.,மற்றும் தாலுகா அலுவலகத்தில் உள்ள உதவி மையம், இ-சேவை மையத்தை அணுகி தெரிந்து கொள்ளலாம் என, கலெக்டர் ஷ்ரவன்குமார்தெரிவித்துள்ளார்.

சின்னசேலம் தாலுகா அலுவலகத்தில் தொடங்கப்பட்டுள்ள கருணாநிதி மகளிர் உரிமைத் தொகை திட்ட உதவி மையத்தில் கலெக்டர் ஷ்ரவன்குமார் நேற்று ஆய்வு செய்து, குடும்ப தலைவிகளிடம் மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பாக கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

பின், அவர், தெரிவித்ததாவது:

தமிழக முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கையின் பேரில், மகளிர் உரிமைத்தொகைதிட்டம் மூலம் தகுதி வாய்ந்த பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு ரூ.1,000 அனுப்பப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 4,34,663 ரேஷன் கார்டுகளில், 3,67,404 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, இதுவரை 91,816 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இத்திட்டத்தின் விண்ணப்ப நிலை குறித்த குறுஞ்செய்தி, விண்ணப்பதாரர்கள் அளித்த மொபைல் எண்ணிற்கு நேற்று 19ம் தேதி முதல் அனுப்பப்படும்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த குடும்ப தலைவிகள், 1100 என்ற முதல்வரின் உதவி மைய எண்ணை தொடர்பு கொண்டும், இ-சேவை மையம் மூலமாகவும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் விண்ணப்ப நிலையை தெரிந்து கொள்ளலாம்.

இதுதவிர, kmut.tn.gov.in/login.html என்ற கருணாநிதி மகளிர் உரிமை திட்ட இணைய முகவரியில், பொதுமக்கள் உள்நுழைவு என்பதை தேர்வு செய்து, அதில் ஆதார் எண் பதிவு செய்தும், கலெக்டர், ஆர்.டி.ஓ., மற்றும் தாலுகா அலுவலகங்களில் செயல்பட்டு வரும் மகளிர் உரிமை திட்ட உதவி மையத்தினை அணுகியும் விண்ணப்ப நிலையை தெரிந்து கொள்ளலாம்.

மேல்முறையீடு செய்ய விரும்பும் பயனாளிகள், குறுஞ்செய்தி பெறப்பட்ட 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் மூலம் கட்டணமின்றி ஆர்.டி.ஓ.,வுக்கு மேல்முறையீடு செய்யலாம். மகளிர் உரிமைத்திட்ட தொகை பயனாளிகள் தங்கள் வங்கி கணக்கில் உள்ள ஆயிரம் ரூபாயை தங்களின் விருப்பப்படி எப்போது வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம்.

குறிப்பிட்ட நாட்களுக்குள் தொகை எடுக்காவிட்டால், வங்கியிலிருந்து மீண்டும் எடுத்துக் கொள்வார்கள் என்று அச்சப்பட தேவையில்லை.இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

ஆய்வின்போது, சின்னசேலம் தாசில்தார் கமலக்கண்ணன், துணை தாசில்தார்கள் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement