மக்காச்சோளம் சாகுபடிக்கு வாய்ப்பே இல்லை! ஒரு சுற்று தண்ணீர் திறப்பால் ஏ மாற்றம்
உடுமலை:மண்டல பாசனத்துக்கு ஒரு சுற்று மட்டும் தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், இந்தாண்டு மக்காச்சோள சாகுபடியை விவசாயிகள் கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பி.ஏ.பி., நான்கு மண்டல பாசனத்துக்கு, திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் வழங்கப்படுகிறது. இந்த பாசன காலத்தில், உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரங்களில், பிரதானமாக மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுவது வழக்கம்.
கறிக்கோழி பண்ணைகளுக்கான தீவன உற்பத்திக்கு, மக்காச்சோளத்தின் தேவை அதிகம் இருப்பதால், நல்ல விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில், விவசாயிகள் இச்சாகுபடியை ஆர்வத்துடன் மேற்கொள்கின்றனர்.
வழக்கமாக ஆக., செப்., மாதங்களில், மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். இதையொட்டி, வடகிழக்கு பருவமழை சீசனும் துவங்கும் என்பதால், இப்பகுதியில், 40 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படும்.
ஆனால், இந்தாண்டு மக்காச்சோள சாகுபடிக்கு, விளைநிலங்களை தயார் செய்ய கூட மழை பெய்யவில்லை. எனவே, நான்காம் மண்டல பாசனத்துக்கு திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவது விவசாயிகளிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்தாண்டு, காண்டூர் கால்வாய் புதுப்பிப்பு பணி, தொகுப்பு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு குறைவு உள்ளிட்ட காரணங்களால், நான்காம் மண்டல பாசனத்துக்கு, ஒரு சுற்று மட்டுமே தண்ணீர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பி.ஏ.பி., விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
விவசாயிகள் கூறியதாவது: மண்டல பாசனத்தில், மக்காச்சோளம் மட்டுமே நிலையான வருவாய் அளிக்கும் சாகுபடியாக இருந்தது. இச்சாகுபடி, 90-110 நாட்கள் கொண்டதாகும். இந்தாண்டு, மண்டல பாசனத்துக்கு ஒரு சுற்று மட்டுமே தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
மக்காச்சோள விதை நடவு செய்தாலும், பயிரின் வளர்ச்சி தருணத்தில், தண்ணீர் இருக்காது. எனவே சாகுபடியை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இவ்வாறு, தெரிவித்தனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!