ADVERTISEMENT
விழுப்புரம்,: விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரி மாணவியர்கள், பெங்களூரு கல்விசார் மையத்தில் கல்வியிடை பயிற்சி பெற்றனர்.
விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரி 3ம் ஆண்டு கணினி அறிவியல் மற்றும் கணினி பயன்பாட்டியல் மாணவியர்கள் கடந்த 4ம் தேதி முதல் 7ம் தேதி வரை, பெங்களூரு சென்று, அங்குள்ள பிரசிடென்சி பல்கலைக்கழக மையத்தில் கல்வியிடைப் பயிற்சி மேற்கொண்டனர்.
தினசரி மக்கள் வாழ்வில், கணினி மென்பொருளில் புதுமையான திட்டத்தை எவ்வாறு உருவாக்குவது, சென்சார் வகைகள், பிளிங்கர் புரோகிராம்கள், குறியீடு உருவாக்கம் மற்றும் உட்பொதிக்கப்பட்ட சி-கட்டளைகள் பற்றி மாணவியர்கள் கற்றனர். மாணவியர்கள் புதிய திட்டங்களை உருவாக்கினர். அதில், சிறந்த 3 திட்டங்களுக்கு பரிசு வழங்கப்பட்டன.
மேலும், மாணவிகள் பெங்களூரில் உள்ள தக்கானல் எனர்ஜி நிறுவனத்திற்கு கல்விசார் பயணம் சென்று, அந்நிறுவனத்தை பார்வையிட்டனர். இக்குழுவில் 26 மாணவிகளும் பேராசிரியர்கள் பிரபா, கலைவாணி இடம்பெற்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!