இருநாட்கள் பராமரிப்பு பணி: குடிநீர் வினியோகம் இருக்காது
உடுமலை;உடுமலை நகராட்சி பகுதிகளில், நாளை மற்றும் 22ம் தேதி குடிநீர் வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
உடுமலை நகராட்சியின், திருமூர்த்தி நகர் தலைமை குடிநீர் நீரேற்று நிலையத்திலுள்ள, மின் மோட்டார்கள், உபகரணங்கள் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், முதல் மற்றும் இரண்டாம் குடிநீர் திட்ட குழாய்களில் ஏற்பட்டுள்ள உடைப்புகள் சீரமைக்கப்படுகிறது.
அதனால், நாளை (21 ம் தேதி) மற்றும் 22ம் தேதி, ஆகிய இரு நாட்களுக்கு உடுமலை நகராட்சி பகுதிகளில் குடிநீர் வினியோகம் இருக்காது. எனவே, பொதுமக்கள் குடிநீரை சேமித்து வைத்தும், காய்ச்சியும் பயன்படுத்துமாறு, நகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!