ADVERTISEMENT
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட தமிழக தனியார் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் கூட்டமைப்பு அலுவலகம் திறப்பு விழா நடந்தது.
கள்ளக்குறிச்சி கச்சேரி சாலை ஏ.கே.டி., வணிக வளாகத்தில் பள்ளி தாளாளர், சங்க கவுரவ தலைவர் மகேந்திரன், அலுவலகத்தை திறந்து வைத்தார். சங்கத் தலைவர் உளுந்துார்பேட்டை அருணா பள்ளி அருணா தொல்காப்பியன் தலைமை தாங்கினார்.
சங்க முதன்மை ஆலோசகர், தியாகதுருகம் மவுண்ட் பார்க் பள்ளி மணிமாறன், செயலாளர் கனியாமூர் சக்தி பள்ளி ரவிக்குமார், பொருளாளர் நயினார்பாளையம் வெல்டன் பள்ளி செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். எலவனாசூர்கோட்டை பாரத் பள்ளி சிராஜூதீன் வரவேறார்.
நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை ராமகிருஷ்ணா சாரதா குருகுல சகோதரிகள் மற்றும் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து தனியார் கல்வி நிறுவன நிர்வாகிகள் மற்றும் முதல்வர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் வரும் அக்டோபர் 8 தேதி மாதாந்திர கூட்டம் நடத்த வேண்டும். மாணவர்களுக்கான டி.சி., சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு ஐ-கோர்ட் மூலம் தீர்வு காண வேண்டும். சங்க உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஜோசப் சீனுவாசன் நன்றி கூறினார்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!