காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த சில மாதங்களுக்கு முன் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இந்தியா -கனடா தரப்பு தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து கனடா அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், அத்தியவாசிய தேவையின்றி இந்திய பயணத்தை கனடா நாட்டவர்கள் தவிர்க்க வேண்டும். தகுந்த பாதுகாப்புடன் இந்தியாவிற்கு குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் போன்ற பதற்றம் மிக்க பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் பயணம் மேற்கொள்ள வேண்டும் அறிவுறுத்தியுள்ளது.
அமெரிக்கா மறுப்பு
இதற்கிடையே ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை விவகாரம் குறித்து உரிம விசாரணை நடத்த அமெரிக்க உதவியை கனடா கோரியுள்ளதற்கு அமெரிக்கா மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாசகர் கருத்து (12)
கனடா மக்கள் யாரும் பயப்பட வேண்டாம். பாரதம் எப்பொழுதும் விருந்தினர்களை நல்ல முறையில் பாதுகாக்கும். சுதந்திரம் என்ற பெயரில் எந்த நாட்டிற்கு எதிரான தீவிரவாத நடவடிக்கைகளுக்கும் இங்கு அனுமதி கிடையாது.
கனடாவில் கொல்லப்பட்ட காலிஸ்தான் ஹர்தீப்சிங்நிஜ்ஜார் கொலையின் பின்னணியில் இந்தியா இருக்கக்கூடும் என கனடா கூறியதை தொடர்ந்து இந்தியா - கனடா உறவு விரிசல் ஏற்பட்டுள்ளது
மிஷனரி என்ற வார்த்தையை தவறாகப் பயன்படுத்தி இதில் கூடவா மதப்பிரிவினையை வெளிக்காட்ட வேண்டும். வெட்கம்
சீக்கிய (கனடாவில் வசித்த) தீவிரவாதிகளால் 'எம்பரர் கனிஷ்கா' ஏர் இந்தியா விமானம் குண்டு வைத்து வெடிக்கப்பட்டு 300க்கும் மேற்பட்ட பயணிகள் இறந்ததை, கனடாவே மறந்தாலும் உலகம் மறக்கவில்லை இன்றும். கனடா அடுத்த பாகிஸ்தான் ஆகிறது.
எனக்கு ஒரு டவுட்...... ஆமாம், நாங்க தான் போட்டோம்ன்னு சொல்லிட்டா போச்சு