Load Image
Advertisement

நெகமம் பேரூராட்சியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

 Dengue eradication operation in Negama Municipality    நெகமம் பேரூராட்சியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை
ADVERTISEMENT
நெகமம்;நெகமம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது.

நெகமத்துக்கு உட்பட்ட பகுதிகளில், பேரூராட்சி நிர்வாகம் சார்பில் டெங்கு கொசுவை தடுக்க, தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில், ஒவ்வொரு வார்டுகளிலும் உள்ள கடைகள், வீடுகள் மற்றும் ரோடுகளில் கொசு மருந்து அடிக்கப்பட்டது.

வீடு வீடாக சென்று டெங்குவால் ஏற்படும் பாதிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பேரூராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

நெகமம் பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பஸ் ஸ்டாண்ட் நிழற்கூரைகள், அரசு அலுவலகங்கள் மற்றும் மக்கள் அதிகளவு கூடும் இடங்களில் மருந்து அடிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசு அலுவலகம் மற்றும் வீடுகளில், தேவையில்லாத தொட்டி மற்றும் பிளாஸ்டிக் பொருட்களில் தேங்கிய தண்ணீரை அகற்ற வேண்டும். இதனால் கொசு பெருகி நோய் பரவும் அபாயம் ஏற்படும். எனவே, இதனை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் காய்ச்சிய குடிநீரை பயன்படுத்த வேண்டும். சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும், என, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

இவ்வாறு, கூறினர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement