மேல்மலையனூரில் டி.எஸ்.பி., அலுவலகம் துவங்க கோரிக்கை! செஞ்சி துணை கோட்டத்தை பிரிக்க வலியுறுத்தல்
செஞ்சி: செஞ்சி, மேல்மலையனுார் பகுதியில் அதிகரித்து வரும் குற்றங்களை தடுக்கவும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் செஞ்சி போலீஸ் துணை கோட்டத்தை இரண்டாக பிரித்து மேல்மலையனுாரை தலைமையிடமாக கொண்டு புதிதாக காவல் துணை கோட்டம் துவங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகுப்பம் என நான்கு போலீஸ் துணை கோட்டங்கள் உள்ளன.
துணை கோட்டங்களின் உயரதிகாரியாக டி.எஸ்.பி.க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம் உட்கோட்டத்தில் 14 காவல் நிலையங்களும், கோட்டகுப்பம் உட்கோட்டத்தில் 6 காவல் நிலையங்களும், திண்டிவனம் உட்கோட்டத்தில் 8 காவல் நிலையங்களும், செஞ்சி துணை கோட்டத்தில் 11 காவல் நிலையங்களும் உள்ளன.
விரைவில் விழுப்புரம் துணை கோட்டத்தை இரண்டாக பிரித்து விக்கிரவாண்டியை தலைமையிடமாக கொண்டு புதிய உட்கோட்டம் துவங்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இதற்கு அடுத்த பெரிய துணை கோட்டமாக செஞ்சி துணை கோட்டம் உள்ளது. செஞ்சி துணை கோட்டத்தில் கெடார், கஞ்சனுார், அனந்தபுரம், நல்லாண் பிள்ளை பெற்றாள், அவலுார்பேட்டை, வளத்தி, சத்தியமங்கலம், கண்டாச்சிபுரம், செஞ்சி, அனைத்து மகளிர் காவல் நிலையம், போக்குவரத்து காவல் நிலையம் என 11 காவல் நிலையங்களும் உள்ளன.
விரைவில் மேல்மலையனுாரில் புதிய காவல் நிலையம் திறக்க உள்ளனர். இதனால் செஞ்சி துணை கோட்டத்தின் கீழ் உள்ள காவல் நிலையங்களின் எண்ணிக்கை 12 ஆக உயரும்.
செஞ்சி துணை கோட்டத்தின் தெற்கு பகுதி எல்லையாக கெடார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சூரப்பட்டு, வெங்கந்துார் கிராமங்களும், வடக்கு பகுதி எல்லையாக அவலுார்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட எதப்பட்டு, தேப்பிராமப்பட்டு கிராமங்களுக்கும் உள்ளன.
வடக்கு-தெற்கு எல்லையில் உள்ள இந்த கிராமங்களுக்கு இடையே 90 கி.மீ., துாரம் உள்ளது.
இதே போல் மேற்கு பகுதி எல்லையாக நாகலாம்பட்டு, மாதப்பூண்டி கிராமங்கள் உள்ளன. கிழக்கு எல்லையாக ஏதாநெமிலி கிராம் உள்ளது. இந்த கிராமங்களுக்கு இடையே 70 கி.மீ., துாரம் உள்ளது. ஒரு எல்லையில் இருக்கும் அதிகாரி சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் போது மறு எல்லைக்கு சென்றடைய 2 முதல் 3 மணிநேரம் ஆகிறது.
செஞ்சி துணை கோட்டத்தில் செஞ்சி, மேல்மலையனுார், விக்கிரவாண்டி, விழுப்புரம் என நான்கு தாலுகா அலுவலகங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் ஏற்படும் சட்டம் ஒழங்கு பிரச்னை சம்மந்தமான கூட்டங்களுக்கு செஞ்சி டி.எஸ்.பி., செல்ல வேண்டி உள்ளது.
திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலத்திற்கும், மேல்மலையனுார் அமாவாசை ஊஞ்சல் உற்சவத்திற்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் செஞ்சி வழியாக வருகின்றனர். கார்த்திகை தீப திருவிழாவின் போது சென்னை, புதுச்சேரியில் இருந்து பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
பிரசித்தி பெற்ற மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலுக்கு மாசி தேர் திருவிழாவிற்கும், ஆடி மாதம் நேர்த்தி கடன் செலுத்தவும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகின்றனர்.
இதனால் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசலும், குற்ற சம்மபவங்களும் அதிகரித்து விட்டன. அத்துடன் செஞ்சி, மேல்மலையனுாரில் ஓட்டல்கள், தொழில் நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் என பெருகி விட்டன. தனி தாலுகாவாக உருவாகி உள்ள மேல்மலையனுாரில் விரைவில் நீதிமன்றம், தாலுகா மருத்துவமனை அமைய உள்ளது.
இதனால் செஞ்சி துணை கோட்டத்தில் நாளுக்கு நாள் வேலைப்பளு அதிகரித்து வருகிறது. பொது மக்களின் பிரச்சனைகளில் முழு கவனம் செலுத்தி அதை முடிவுக்கு கொண்டு வருவதில் தாமதம் ஏற்படுகிறது.
எனவே, மேல்மலையனுாரில் புதிதாக காவல் நிலையம் திறக்க உள்ள நிலையில், மேல்மலையனுாரை தலைமையிடமாக கொண்டு மேல்மலையனுார், வளத்தி, அவலுார்பேட்டை, நல்லாண்பிள்ளை பெற்றாள், சத்தியமங்கலம் காவல் நிலையங்களை இதன் கீழ் கொண்டு வந்து புதிய துணை கோட்டம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
புதிய துணை கோட்டம் உருவாகினால் மேல்மலையனுாருக்கு வரும் பக்தர்களுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்க முடியும், அத்துடன்செஞ்சி, மேல்மலையனுார் பகுதியில் சட்டம் ஒழுங்கை சரியாக பராமரிக்கவும் முடியும். எனவே காவல் துறை உயரதிகாரிகள் இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!