Load Image
Advertisement

மழையால் ஆற்றில் நீர்வரத்து: சுற்றுலா பயணியர் குளிக்க தடை

 Flooding in the river due to rain prevents tourists from bathing    மழையால் ஆற்றில் நீர்வரத்து: சுற்றுலா பயணியர் குளிக்க தடை
ADVERTISEMENT
வால்பாறை:வால்பாறையில், ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து வரும் சுற்றுலா பயணியர் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

வால்பாறையில், தென்மேற்கு பருவமழை பெய்வதால், இங்குள்ள ஆறு மற்றும் நீர்வீழ்ச்சிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. பரவலாக பெய்யும் மழையால், வால்பாறையில் கடுங்குளிர் நிலவுகிறது.

எஸ்டேட் பகுதியில், காலை, மாலை நேரங்களில் கடும் பனிமூட்டம் நிலவுவதால், தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதேபோல், தமிழக - கேரள எல்லையில் உள்ள அதிரப்பள்ளி பகுதியில் மழை பெய்வதால், நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணியர் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், நீர்வீழ்ச்சிகளில் சுற்றுலா பயணியர் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், வால்பாறை மற்றும் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி செல்லும் சுற்றுலா பயணியர் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.

இந்நிலையில், மேல்நீராறு அணையில் இருந்து வினாடிக்கு, 516 கனஅடி தண்ணீரும், கீழ்நீராறு அணையில் இருந்து, 66 கனஅடி தண்ணீரும் சோலையாறு அணைக்கு திறந்துவிடப்படுகிறது. இதனால், சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 69.71 அடியாக இருந்தது.

சோலையாறு அணைக்கு வினாடிக்கு, 696 கனஅடி தண்ணீர் வரத்தாக உள்ளது. அணையிலிருந்து மின் உற்பத்திக்காக வினாடிக்கு, 1,338 கனஅடி தண்ணீர் வீதம் திறந்துவிடப்படுகிறது.நீர்வரத்தை விட, வெளியேற்றம் அதிகம் உள்ளதால், நீர்மட்டம் சரிந்து வருகிறது. அதிகபட்சமாக மேல்நீராறில், 36 மி.மீ., மழை பெய்தது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement