ADVERTISEMENT
பள்ளிக்கரணை:பள்ளிக்கரணை அடுத்த, சுண்ணாம்பு கொளத்துார், பிரதான சாலையைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன், 72; அரசு பள்ளி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவர், நேற்று காலை 10:00 மணிக்கு வீட்டிற்கு மளிகை பொருட்கள் வாங்க, வெளியே கிளம்பினார்.
அப்போது, ரேடியல் சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே நடந்து சென்றார். அப்போது, அவ்வழியாக வந்த சரக்கு லாரி, மற்றொரு வாகனத்தில் மோதாமல் இருக்க இடது பக்கமாக திரும்பியபோது, கமலக்கண்ணன் மீது மோதி சாலையோரம் கவிழ்ந்தது.
இதில் பலத்த காயமடைந்த கமலக்கண்ணன், சம்பவ இடத்திலேயே பலியானார். சரக்கு வாகனத்தில் வந்த இரண்டு பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் பள்ளிக்கரணையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்த விபத்தில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனமும் சேதமடைந்தது. இது குறித்த தகவலின்படி, பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று கமலக்கண்ணன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய வாகன ஓட்டுனரை தேடி வருகின்றனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!