Load Image
Advertisement

தற்காலிக பட்டாசு கடை விண்ணப்பிக்க அழைப்பு

பொள்ளாச்சி;தீபாவளி பண்டிகைக்கு, தற்காலிக பட்டாசு கடை நடத்த விரும்புவோர் விண்ணப்பிக்க, மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

இதுதொடர்பாக, கலெக்டர் கிராந்திகுமார் அறிக்கை:

வரும் நவ., 12ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. கோவை மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளில் (மாநகராட்சி பகுதிகளை தவிர்த்து) தற்காலிக பட்டாசு கடை நடத்த விரும்புவோர், மாவட்ட வருவாய் அலுவலரிடம் தற்காலிக உரிமம், ஒற்றை சாளர முறையில் பெறுவதற்கு, இணைய வழியில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வரும், 19ம் தேதி முதல் அக்., 18க்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதன்பின் அனுப்பும் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். மருத்துவமனை, பள்ளிகள், வழிபாட்டு தலங்கள், திருமண மண்டபங்கள், எளிதில் தீப்பற்றும் பொருட்கள் உள்ள பகுதிகள், கட்டடங்கள், டீக்கடை அருகில் பட்டாசு கடை அமைக்கக் கூடாது.

கட்டடத்தில் கண்டிப்பாக இரு வழி இருக்க வேண்டும். பொதுமக்கள் கூடுமிடங்கள், பஸ் ஸ்டாப், பஸ் ஸ்டாண்ட் அருகிலோ, திருமண மண்டபங்கள், அரங்கங்கள், சமுதாய கூடங்களில் பட்டாசு கடை அமைக்கக் கூடாது. கடையை சுற்றிலும், 50 மீட்டர் சுற்றளவுக்கு காலியிடம் இருக்க வேண்டும்.

இவ்வாறு, கலெக்டர் தெரிவித்துள்ளார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement