தியாகதுருகம் பகுதியில் 120 சிலைகள் பிரதிஷ்டை
தியாகதுருகம் : தியாகதுருகம் பகுதியில் 120 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
தியாகதுருகம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் நேற்று முன்தினம் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.
தியாகதுருகம் பேரூராட்சியில் 16 இடங்களில் பிரம்மாண்ட விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து,வழிபாடு நடந்தது.
அதேபோல் தியாகதுருகம் சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் 120 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இந்தாண்டு 20 விநாயகர் சிலைகள் அதிகம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!