Load Image
Advertisement

குளத்தை அகலப்படுத்தாமல் துார் வாரும் பணி ராயல்பட்டு கிராமத்தில் அதிருப்தி

 Duar Varum work without widening the pond is a source of dissatisfaction in Royalpattu village    குளத்தை அகலப்படுத்தாமல் துார் வாரும் பணி ராயல்பட்டு கிராமத்தில் அதிருப்தி
ADVERTISEMENT
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த கரும்பாக்கம் ஊராட்சியில் அடங்கிய ராயல்பட்டு கிராமத்தில் பெரியகுளம் உள்ளது. இதை அகலப்படுத்தி சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து, குளத்தை துார் வாரி சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

இந்நிலையில், குளத்தை அகலப்படுத்தாமல் துார் வாரப்படுவதாக, அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து அப்பகுதி கவுன்சிலர் ஒருவர் கூறியதாவது:

கரும்பாக்கம் ஊராட்சியில் இந்த குளம் தான் பெரியது. இந்த குளத்தின் உள் அளவு 95 மீட்டருக்கு, 105 மீட்டர் பரப்பு கொண்டது.

தற்போது, இக்குளத்தில் மத்திய பகுதியில் மட்டும் துார் வாரும் பணி நடக்கிறது.

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, 10.80 லட்சம் ரூபாய் மதிப்பில், 40க்கு 40 மீட்டர் தான் துார் வாரி குளம் கட்ட முடியும் என கூறுகின்றனர்.

எங்களுக்கு குளம் இருக்கும் அளவுப்படி துார் வாரி சீரமைக்க வேண்டும். அகலத்தை குறைக்கக் கூடாது என்று கோரிக்கை வைத்துள்ளோம். குறைந்தது, 80க்கு 80 மீட்டர் அளவில் அகலப்படுத்த வேண்டும்.

அதற்கு, 'அவ்வாறு செய்ய முடியாது. ஒதுக்கீடு செய்த மதிப்பீட்டீன்படியே பணி மேற்கொள்ளப்படும். வேலை செய்ய இடையூறு செய்தால், புகார் கொடுப்போம்' என வட்டார வளர்ச்சி அலுவலர் மிரட்டுகிறார்.

ஏற்கனவே, கடந்த 2019ம் ஆண்டு, 19 லட்சம் ரூபாய் மதிப்பில், இதே குளத்தை சீரமைத்தனர். ஆனால், சீரமைப்பு பணிகளை தரமாக மேற்கொள்ளவில்லை.

இவ்வாறு அவர் கூறினர்.

இது குறித்து, வட்டார வளர்ச்சி அலுவலக பொறியாளர் கூறியதாவது:

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் வழிகாட்டுதல்படியே பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. குளத்தின் உள்ளே, 30க்கு 30 மீட்டர் அளவில் பணி மேற்கொள்ளப்பட்டது.

அப்பகுதி கவுன்சிலர்கள், மக்கள் கோரிக்கை வைத்ததால், 40க்கு 40 மீட்டராக அளவு அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுபோல், திருப்போரூர் ஒன்றியத்தில், 30 ஊராட்சிகளில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement