Load Image
Advertisement

முகையூர் ஏரி நடுவே ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட சாலை அகற்றம்

 Removal of the road encroached on in the middle of Mukaiyur Lake    முகையூர் ஏரி நடுவே ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட சாலை அகற்றம்
ADVERTISEMENT
கூவத்துார்:கூவத்துார் அருகே முகையூர் கிராமத்தில், சர்வே எண் 188ல் ஏற்றத்தாழ்வு, 120 ஏக்கர் பரப்பளவு கொண்ட பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பெரிய ஏரி உள்ளது.

இந்த ஏரி நீரின் வாயிலாக, முகையூர் கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்படுகிறது.

இரண்டு இடங்களில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 2017ம் ஆண்டு, கடற்கரை ஓரத்தில் பீச் ஹவுஸ் வீட்டு மனைகள் அமைக்கப்பட்டு, அதற்கு சென்று வர ஏரியின் குறுக்கே சாலை அமைக்கப்பட்டது.

ஏரியை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சாலைகளையும், ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என, கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன், ஏரி நீர்வரத்தை பாதிக்கும் வகையில், ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் ஏரி நடுவே அமைக்கப்பட்டுள்ள சாலைகளை அகற்ற வேண்டும் என, நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதையடுத்து, ஏரியை அளவீடு செய்த போது, ஏரியில் சாலைகள் மற்றும் அம்மன் கோவில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

கடந்த ஆக., 1ம் தேதி, போலீஸ் பாதுகாப்புடன் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற முற்பட்ட போது, சாலை மற்றும் அம்மன் கோவிலை அகற்ற, கிராம மக்கள் கால அவகாசம் கேட்டனர்.

இதையடுத்து, மயானத்திற்கு செல்ல அமைக்கப்பட்டு இருந்த சாலையை மட்டும் அகற்றிவிட்டு, மீதம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, பொதுப்பணித்துறை அதிகாரிகள், 10 நாட்கள் கால அவகாசம்அளித்தனர்.

நேற்று, மீதம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம், பொதுமக்கள் கூடுதல் கால அவகாசம் கேட்டனர்.

ஆனால், பொதுப்பணித்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சு நடத்தி, பொக்லைன் இயந்திரம் வாயிலாக, ஏரியில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த சாலைகளை அகற்றினர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement