ADVERTISEMENT
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டையில் பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி, பா.ஜ.,வினர் கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
நிகழ்ச்சிக்கு நகர தலைவர் காந்தி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் அருள் அக்கட்சி கொடியேற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.
செயலாளர் பாலாஜி, மாவட்ட துணைத் தலைவர் சத்தியசீலன், மாவட்ட உள்ளாட்சி பிரிவு தலைவர் ராஜேந்திரன், மாநில திட்ட பொறுப்பாளர் குருமூர்த்தி, மாவட்ட ஆன்மிக பிரிவு செயலாளர் சக்திவேல், நகர பொதுச்செயலாளர் வெங்கடேசன் நகர பொருளாளர் ஏழுமலை, நகரத் துணைத் தலைவர் பானுப்பிரியா, மாவட்ட செயலாளர் உமா சங்கர், முத்துலட்சுமி, ஆன்மிகப் பிரிவு நகர தலைவர் சரத்குமார், ஒன்றிய தலைவர் பிரவீன்குமார், நிர்வாகிகள் சக்திவேல், ரவி, மண்ணாங்கட்டி, வளர்மதி உட்பட பலர் பங்கேற்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!