Load Image
Advertisement

விநாயகர் ஊர்வலத்தில் தகராறு டிரைவரை வெட்டியவருக்கு கம்பி

 Kambi to man who slashed driver during Vinayagar procession    விநாயகர் ஊர்வலத்தில் தகராறு டிரைவரை வெட்டியவருக்கு கம்பி
ADVERTISEMENT
மறைமலை நகர்:மறைமலை நகர் நகராட்சி, காந்தி நகரில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இங்கு, நேற்று முன்தினம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சுவாமி ஊர்வலம் நடந்தது.

விநாயகரை 'பொலிரோ' வாகனத்தில் வைத்து, பொது மக்கள் ஊர்வலமாக கொண்டு சென்றனர். வாகனத்தை, செங்கல்பட்டு அடுத்த பழமாத்துார் பகுதியை சேர்ந்த தனபால், 35, என்பவர் இயக்கினார்.

வாகனத்தில், விநாயகர் பக்தி பாடல்கள் ஒலித்தன. அப்போது, அங்கு வந்த காந்தி நகர் பகுதியை சேர்ந்த பிரவீன், 25, என்பவர், சினிமா பாடல்களை போடச் சொல்லி டிரைவரிடம் சண்டையிட்டுள்ளார்.

ஆனால், டிரைவர் அதற்கு சம்மதிக்காததால் ஆத்திரமடைந்த பிரவீன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், டிரைவர் தனபாலின் கை, தலை உள்ளிட்ட இடங்களில் வெட்டினார்.

இதில் ஆத்திரமடைந்த பொது மக்கள், பிரவீனை மடக்கிப் பிடித்து சரமாரியாக தாக்கினர். பின், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற மறைமலை நகர் போலீசார், பிரவீனை மீட்டு, காவல் நிலையம் அழைத்து சென்றனர். பின், இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, பிரவீனை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement