சூதாடிய 6 பேர் கைது
திருவெண்ணெய்நல்லுார் : சூதாடிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவெண்ணெய்நல்லுார் சப் இன்ஸ்பெக்டர் புனிதவள்ளி தலைமையிலான போலீசார் மலட்டாறு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் பணம்
வைத்து சூதாடிய அதே பகுதியை சேர்ந்த கஜேந்திரன், 30; வினோத், 27; கார்த்திக், 30; பிரகாஷ்,31; வீரமணி, 35; சூர்யா, 26; ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 4 சீட்டுகட்டுகள் மற்றும் 100 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!