பிஹெச்.டி., மாணவர் துாக்கிட்டு தற்கொலை
மறைமலை நகர்:கடலுார் மாவட்டம், சிதம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் எழிலரசன், 23. பொத்தேரியில் வாடகை வீட்டில் தங்கி, எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழகத்தில், பிஹெச்.டி., படித்து வந்தார்.
அவருடன், மதுரையைச் சேர்ந்த மற்றொரு மாணவர் விக்னேஷ் பாபு, 23, என்பவர் வசித்து வந்தார். விக்னேஷ் பாபு, கடந்த 15ம் தேதி சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.
நேற்று காலை, மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்த போது, எழிலரசன் மின்விசிறியில் துாக்கில் தொங்கியபடி இறந்து கிடந்து உள்ளார்.
இதுகுறித்து, மறைமலை நகர் போலீசாருக்கு விக்னேஷ் பாபு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
எழிலரசனின் அறையை சோதனை செய்த போலீசார், அங்கு இருந்த கடிதத்தை கைப்பற்றினர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!