Load Image
Advertisement

உயர்மட்ட பாலம் கட்டும் பணி இழுபறி

 High-level bridge construction is a tug of war    உயர்மட்ட பாலம் கட்டும் பணி இழுபறி
ADVERTISEMENT
உடுமலை;ஜக்கம்பாளையம் பாலம் கட்டுமான பணி இழுபறியாக நடப்பதால், போக்குவரத்தில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு, கிராம மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

உடுமலை - குமரலிங்கம் ரோட்டில் இருந்து, ஜக்கம்பாளையம், கிளுவங்காட்டூர் செல்லும் ரோட்டில், மழை நீர் ஓடை குறுக்கிடுகிறது. மழை காலங்களில், இவ்வழியாக செல்ல முடியாமல், போக்குவரத்து பாதித்து வந்தது. இதனால், அப்பகுதி மக்கள், எலையமுத்துார் சென்று உடுமலைக்கு வர வேண்டிய நிலை இருந்தது.

இப்பிரச்னைக்கு தீர்வாக, ஓடையின் குறுக்கே, உயர்மட்ட பாலம் கட்ட நீண்ட காலமாக மக்கள் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, அரசு நிதி ஒதுக்கீடு செய்து பாலம் கட்டுமான பணிகள், கடந்த, ஏப்., மாதத்தில், துவங்கியது.

முறையாக மாற்றுப்பாதை அமைக்காமல், பாலம் கட்டும் பணி துவங்கியதால், அவ்வழியாக இயக்கப்பட்ட பஸ்கள் வேறு வழித்தடத்தில், மாற்றி விடப்பட்டன.

இதனால், கிராம மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். இந்நிலையில், பாலம் கட்டுமான பணி, குறித்த நேரத்தில் முடியாமல் இழுபறியாகியுள்ளது.

பாலத்தின் ஓடுதளம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், தடுப்பு சுவர் கட்டப்படவில்லை. மேலும், இரவு நேரங்களில், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டுநர்கள், நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர்.

வேளாண் விளைபொருட்களை எடுத்து செல்லும் வாகனங்களும் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே, பாலம் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். பணிகள் நிறைவு பெறும் வரை, முறையான எச்சரிக்கை பலகை மற்றும் தடுப்பு அமைக்க மக்கள் வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement