ஜி.எஸ்.டி., பில் போடாமல் கனிமம் எடுத்துச் செல்லாதீங்க
பொள்ளாச்சி:'ஜி.எஸ்.டி., பில் போடாமல், கேரளாவுக்கு கனிம வளங்களை எடுத்துச் செல்லக்கூடாது' என, குவாரி குத்தகைதாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு, கனிம வளங்கள் கடத்திச் செல்லப்படுகின்றன. குவாரிகளை குத்தகைக்கு எடுத்தவர்கள், அனுமதிக்கு மாறாக, விதிமுறையை மீறி, அதிகமான ஆழத்துக்கு கனிமங்களை வெட்டி எடுப்பது தொடர்வதால், கனிம வளத்துறையினர் கள ஆய்வு செய்து, அபராதம் விதிக்கின்றனர்.
இதைத்தொடர்ந்து, கிரஷர் மற்றம் குவாரிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள், அரசுக்கு 'ராயல்டி' செலுத்தி, அனுமதிச்சீட்டு பெறாமல், சட்ட விரோதமாக கனிம வளங்கள் எடுத்துச் செல்லக்கூடாது என, சங்கம் சார்பாக, ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவை மாவட்ட கிரஷர் மற்றும் குவாரிகள் சங்க மாவட்ட தலைவர் சந்திர பிரகாஷ், சங்க உறுப்பினர்களுக்கு கூறியிருப்பதாவது:
ஜி.எஸ்.டி., பில் போட்ட பிறகே, கேரளாவுக்கு கனிம வளங்கள் அனுப்ப வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட அளவு மட்டுமே அனுப்ப வேண்டும்; கூடுதல் எடை அனுப்பக் கூடாது. கடுமையான நடவடிக்கை எடுக்கச் சொல்லி, அரசிடம் இருந்து உத்தரவு வந்திருக்கிறது. விதிமுறை மீறி செயல்பட்டால், குவாரிகளை 'சீல்' வைத்து விடுவார்கள். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!