கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் ரூ.163 கோடி கேட்கிறது கும்டா
கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்திற்காக புதிய ரயில் நிலையம், நவீன வசதிகளுடன் நடை மேம்பாலம் அமைக்கும் பணிகளுக்கு, 163 கோடி ரூபாய் தேவை என, சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமமான, 'கும்டா' தமிழக அரசிடம் தெரிவித்துள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வாக, வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையம், 400 கோடி ரூபாயில், 40 ஏக்கர் இடத்தில் கட்டப்பட்டுள்ளது.
புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்ட பின், வெளியூர் பேருந்துகள் சென்னைக்குள் வருவதற்கு தடை விதிக்க, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமமான சி.எம்.டி.ஏ., முடிவு செய்துள்ளது.
இதனால், வெளியூர் செல்வோரும், வெளியூர்களில் இருந்து வருவோரும், கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு செல்வது எப்படி என்ற கேள்வி எழுகிறது.
இதில், தற்போதைய நிலவரப்படி, புதிய பேருந்து நிலையத்திற்கு பயணியர் வந்து செல்ல, மாநகர பேருந்துகள் மட்டுமே ஒரே வாய்ப்பாக உள்ளன.
மேலும், விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை, மெட்ரோ ரயில் சேவையை விரிவாக்க, மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதற்கான பூர்வாங்க பணிகள் துவக்கப்பட்டுஉள்ளன. இதே போன்று, மின்சார ரயில் வாயிலாக கிளாம்பாக்கத்திற்கு மக்கள் வந்து செல்ல, வசதி ஏற்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
இதுகுறித்து, 'கும்டா' அதிகாரிகள் கூறியதாவது:
வண்டலுார், ஊரப்பாக்கம் இடையே கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்க, கும்டா பரிந்துரைத்தது.
இதற்கான நிலம் தேர்வு, கையகப்படுத்தும் பணிகள் சி.எம்.டி.ஏ.,விடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன.
கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து நிலையத்திற்கு மக்கள் வந்து செல்ல, புதிய நடைமேம்பாலம் அமைக்கவும், கும்டா பரிந்துரைத்துள்ளது. இதற்கான மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு உள்ளன.
இதன்படி, புதிய ரயில் நிலையத்திற்குத் தேவையான நிலங்களை கையகப்படுத்த, 43 கோடி ரூபாய், ரயில் நிலையம் அமைக்க, 20 கோடி ரூபாய், நவீன வசதிகளுடன் புதிய நடைமேம்பாலம் அமைக்க, 100 கோடி ரூபாய் என, 163 கோடி ரூபாய் தேவைப்படும் என, மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு, அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அக்., 31ம் தேதிக்குள் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கவும், நவ., 15ம் தேதிக்குள் ஒப்பந்தம் கோரும் பணிகளை முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பணிகள் அனைத்தையும், 2024 டிச., 31ம் தேதிக்குள் முடிக்க, அரசின் அனுமதி கோரப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

தீபாவளிக்கு திறக்கப்படுமா?
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், கடந்த 2022 தீபாவளிக்கு திறக்கப்படும் என, முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி பணிகள் முடியாத நிலையில், பேருந்து நிலையம் திறப்பு தள்ளிப்போனது.இதன்பின், 2023 பொங்கல் பண்டிகைக்கு திறக்கப்படும் என கூறப்பட்டது. அப்போதும், பேருந்து நிலையம் திறக்கப்படவில்லை.பிரதான கட்டடத்தில் இரும்பு வளைவு பணிகளால் இது தாமதமானது.
இந்நிலையில், கட்டுமான பணிகள் முடிந்தாலும், ஜி.எஸ்.டி., சாலையில் மழைநீர் வடிகால், பின்பக்க இணைப்பு சாலை பணிகள் இன்னும் முடியாததால், திறப்பு விழா தாமதமாகி உள்ளது. தற்போது இந்த பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதால், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையான, நவ., 12ம் தேதிக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
- நமது நிருபர் -
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!