ADVERTISEMENT
ஆனைமலை;கோட்டூர் அருகே,பெரியணை கால்வாய் பகுதியில், 32 லட்சம் ரூபாய் செலவில் புதிய பாலம் அமைக்கப்படுகிறது.
வால்பாறை சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட,கோட்டூர் அருகே பெரியணை கால்வாய் உள்ளது. இங்கு, புதிய பாலம் அமைத்து கொடுக்க வேண்டும் என, விவசாயிகள், வால்பாறை எம்.எல்.ஏ., அமுல்கந்தசாமியிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, எம்.எல்.ஏ., தொகுதி நிதியில் இருந்து, 32 லட்சம் ரூபாய் செலவில்,புதிய பாலம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது.
எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாய சங்க நிர்வாகி பழனிசாமி, விவசாயி மணிகண்டன், ஆழியாறு செயற்பொறியாளர் சிங்காரவேலன், உதவி செயற்பொறியாளர் கோகுல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!