ADVERTISEMENT
மதுராந்தகம்:மதுராந்தகம் ஏரி, பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஏரியின் மொத்த நீர்ப்பிடிப்பு பகுதி, 2,500 ஏக்கர்.
ஐந்து மதகுகள் வழியாக, 4,000 ஏக்கர் விவசாய நிலங்களும், மேல்மட்ட கால்வாய் வழியாக, 30 ஏரிகளுக்கு நீர் கொண்டு செல்லப்பட்டு, 3,000 ஏக்கர் நிலங்களும் என, மொத்தம் 7,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
தற்போது, 120 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஏரியை ஆழப்படுத்தி கொள்ளளவை உயர்த்துதல் மற்றும் ஏரியின் கலங்கல்களில், கதவணையுடன் கூடிய உபரிநீர் போக்கி கட்டமைக்கும் பணிகள், கடந்த ஓராண்டுக்கு மேலாக நடந்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, ஏரியின் உபரிநீர் வெளியேறும் பழைய கலங்கல் பகுதிகள் உடைத்து எடுக்கப்பட்டு, புதிதாக கலங்கல் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
தற்போது, ஏரியில் இயந்திரங்கள் உதவியுடன் மண் அள்ளப்பட்டு, ஆழப்படுத்துதல் பணி நடந்து வந்தது.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக, 20 நாட்களுக்கும் மேலாக மண் அள்ளும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பெயர் குறிப்பிட விரும்பாத பொதுப்பணித்துறை அதிகாரி கூறியதாவது:
ஏரியில் மண் அள்ளி ஆழப்படுத்தும் பணி, மழையின் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
ஏரியில் வாகனங்கள் செல்லும் அளவிற்கு ஈரப்பதம் காய்ந்த பின், சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் மீண்டும் மண் அள்ளும் பணி துவக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!