நாய்கள் தொல்லை; ரோட்டுல நடக்க முடியல!
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, வீரப்பகவுண்டனுாரில் தெருநாய் தொல்லை அதிகரித்து உள்ளதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
கிணத்துக்கடவு, சொக்கனுார் ஊராட்சி, வீரப்பகவுண்டனுாரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். வீரப்பகவுண்டனுார் மேற்கு பகுதியில், கடந்த சில நாட்களாக தெருநாய் தொல்லை அதிகமாக உள்ளதால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும், இருசக்கர வாகனத்தில் ரோட்டில் பயணம் செய்தால், 10க்கும் மேற்பட்ட தெருநாய்கள் வாகன ஓட்டுநர்களை விரட்டி, இம்சை செய்கின்றன. இருசக்கர வாகனத்திலோ அல்லது அவ்வழியில் நடந்து சென்றாலோ, தெருநாய்கள் அச்சுறுத்துகின்றன, என்கின்றனர் பொதுமக்கள்.
இங்குள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து, விளைபயிர்களையும் நாய்கள் நாசம் செய்கின்றன. மேலும், தோட்டத்து சாலைகளில் உள்ள ஆடு, மாடு மற்றும் கோழி போன்றவைகளை கடித்து விடுகின்றன. இதனால் கால்நடைகள் வளர்ப்பதும் பெரும் சவாலாக மாறியுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
இப்பகுதியில், உலாவும் தெருநாய்களை பிடித்து, குடும்பகட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து, காப்பகத்தில் பராமரிக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!