Load Image
Advertisement

கொடூர் சிட்கோ வளாகத்தில் தரமற்ற கட்டுமானம் உடைந்து நொறுங்கும் மழைநீர் வடிகால்

 Atrocious CITCO complex with shoddy construction and crumbling stormwater drains    கொடூர் சிட்கோ வளாகத்தில் தரமற்ற கட்டுமானம் உடைந்து நொறுங்கும் மழைநீர் வடிகால்
ADVERTISEMENT
செய்யூர்:செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், கொடூர் கிராமத்தில், 99 ஏக்கர் பரப்பளவில், தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பாக, 'சிட்கோ' தொழிற்பேட்டை அமைக்கப்பட்டு வருகிறது.

அதற்காக, 45.94 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில், சாலை, மழைநீர் வடிகால், சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளுக்கு 'டெண்டர்' விடப்பட்டு, கடந்த ஆண்டு ஜூலை மாதம் கட்டுமானப் பணியை தனியார் நிறுவனம் துவங்கியது.

இந்த சிட்கோ தொழிற்பேட்டை மூலம், 1,500 பேர் நேரடியாகவும், 4,000 பேர் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெறும் வகையில், 103 தொழில் மனைகளுடன் கூடிய புதிய தொழிற்பேட்டை உருவாக்கப்பட்டு வருகிறது.

ஆறு மாதத்தில் கட்டுமானப் பணிகள் முடிவடையும் என கூறப்பட்ட நிலையில், பருவ மழை காரணமாக கட்டுமானப்பணிகள் பாதிக்கப்பட்டன.

பின், மீண்டும் கட்டுமான பணிகள் துவங்கி நடந்து வந்த நிலையில், பணிகள் முழுதும் முடிவதற்கு முன், கடந்த ஜூன் 27ம் தேதி காணொளி காட்சி வாயிலாக, தமிழக முதல்வர் ஸ்டாலின், சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தை துவக்கி வைத்தார்.

இந்நிலையில், தொழிற்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால் கட்டுமானப் பணியில் தரம் இல்லை என, தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பணி முடிவதற்கு முன்பே சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து, கம்பிகள் வெளியே தெரியும் அளவில் தான் மழைநீர் வடிகால்வாய்கள் உள்ளதாக, அப்பகுதிவாசிகள் குமுறுகின்றனர்.

மேலும், பல்வேறு இடங்களில் கட்டுமானப் பணிகள் முழுதும் முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளதால், இரும்புக் கம்பிகள் துருபிடித்துள்ளன.

ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள், சிட்கோ தொழிற்பேட்டையில் ஏற்கனவே நடந்துள்ள கட்டுமான பணிகளின் தரத்தை பரிசோதித்து, தற்போது நடந்து வரும் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement