Load Image
Advertisement

உருக்குலைந்த சர்வீஸ் ரோடு வாகன ஓட்டுநர்கள் அதிருப்தி

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு சர்வீஸ் ரோடு படு மோசமாக இருப்பதால், இருசக்கர வாகன ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர்.

கிணத்துக்கடவு பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, மேம்பாலம் கட்டப்பட்டு, இருபுறமும் சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டது. இந்த வழியில் நாள்தோறும் அதிகப்படியான வாகனங்கள் சென்று வருகிறது. இதில், புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள சர்ச் முன், சர்வீஸ் ரோடு சேதமடைந்துள்ளது. மேலும், இந்த ரோட்டின் ஓரத்தில் கழிவு நீர் கால்வாய் உள்ளது. இதில் வரும் கழிவு நீர் சர்வீஸ் ரோட்டில் ஏகமாக செல்கிறது.

இந்த ரோட்டில், குறிச்சி - குனியமுத்துார் குடிநீர் குழாய் உள்ளது. இந்த இடத்தில் பள்ளம் ஏற்பட்டு, கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால் அவ்வழியில் வரும் இருசக்கர வாகன ஓட்டுநர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனை சரி செய்ய தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் அவ்வப்போது மணல் கொட்டப்படுகிறது. ஆனால், இதற்கு தற்போது வரை நிரந்தர தீர்வு காணப்படாமல் உள்ளதால், ஓட்டுநர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement