Load Image
Advertisement

முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

-- நமது நிருபர் -

கோவையில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் தலைமையில் தொழிற்பேட்டைகள், தொழில்குழுமங்களை சேர்ந்த உறுப்பினர்களுடன் கலந்தாய்வு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு, 2024 ஜன., 7, 8 ஆகிய தேதிகளில் சென்னையில் நடக்கிறது. இதனை அடிப்படையாக கொண்டே, கோவையில் இக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில், தொழிற்பேட்டைகள் மற்றும் தொழில்குழுமங்களை சார்ந்த உறுப்பினர்கள், வரும் காலங்களில், சுமார் 2,000 கோடி மதிப்பில் முதலீடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவித்தனர்.

மேலும், 48 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுடன், 571 கோடி மதிப்பிலான முதலீடுகளை மேற்கொள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், கலெக்டர் முன்னிலையில் கையெழுத்தானது.

கலெக்டர் கிராந்திகுமார் கூறியதாவது:

மாவட்ட தொழில்மையம் வாயிலாக, புதிதாக தொழில் துவங்கவும், தொழிலை விரிவுபடுத்தவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கோவையில் அதிகளவிலான தொழில் முதலீடுகளை மேற்கொள்ளவேண்டும்.

அதற்கு, தொழில்நிறுவனங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும். தொழில் துவங்க அனைத்து வழிகாட்டுதல்களும், ஆலோசனைகளும் மாவட்ட தொழில் மையம், சிட்கோ போன்ற அரசு துறைகளின் சார்பில் வழங்கப்படும்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்

மாவட்ட தொழில்மைய மேலாளர் திருமுருகன், சிட்கோ கிளை மேலாளர் சண்முகவடிவேல், தொழிற்பேட்டை, தொழில் நிறுவனங்களின் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement