Load Image
Advertisement

வியட்நாம் சந்தையில் ஹூண்டாய் கஸ்டின்; இந்தியாவில் இன்னோவாவுக்கு சிக்கலாகுமா?

All-New Hyundai Custin MPV Is A Direct Rival To Toyota Innova வியட்நாம் சந்தையில் ஹூண்டாய் கஸ்டின்; இந்தியாவில் இன்னோவாவுக்கு சிக்கலாகுமா?
ADVERTISEMENT
ஹூண்டாய் நிறுவனம் தற்போது கஸ்டின் (Hyundai Custin) என்ற புதிய காரை வியட்நாம் சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.


இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில், மிகப்பெரிய அளவில் கார் உற்பத்தி செய்து வரும் ஹூண்டாய் நிறுவனம், 7 சீட்டர் செக்மென்டில் எம்விபி ரக காரை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. அதாவது, 7 சீட்டர் செக்மெண்டில் இந்திய சந்தையை பொறுத்தவரை, தற்போது முன்னிலையில் இருக்கும் 7 சீட்டர் காரான டொயோட்டா இன்னோவாவுக்கு போட்டியாக ஹூண்டாய் நிறுவனம் தற்போது கஸ்டின் காரை விற்பனைக்கு களமிறங்கலாம் எனத் தெரிகிறது.
Latest Tamil News

புதிய கஸ்டின் மாடலில் 2.0 லிட்டர் டர்போ ஜிடிஐ மற்றும் 1.5 லிட்டர் டர்போ ஜிடிஐ எஞ்ஜின் என இரண்டு எஞ்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 2.0 லிட்டர் இன்ஜின் அதிகபட்சமாக 6,000 ஆர்பிஎம்மில் 236 ஹெச்பி பவர் மற்றும் 1,500 - 4,000 ஆர்பிஎம்மில் 353 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, இந்த எஞ்ஜின், 0-100 கிமீ வேகத்தை வெறும் 8.2 வினாடிகளில் எட்டி விடும். அதேசமயம், 1.5 லிட்டர் டர்போ ஜிடிஐ எஞ்ஜினை பொறுத்தவரை, அதிகபட்சமாக 5,500 ஆர்பிஎம்மில் 170 ஹெச்பி பவர் மற்றும் 1,500 - 4,000 ஆர்பிஎம்மில் 253 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். இதிலும் அதே 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் 0-100 கிமீ வேகத்தை வெறும் 9.9 வினாடிகளில் எட்டி விடுமாம்.

Latest Tamil News

தொழில்நுட்ப அம்சங்களை பொறுத்தவரை, முக்கிய அம்சமாக இந்த காரின் 2 பக்கத்திலும், வழக்கமான டோர்களுக்கு பதிலாக, ஆட்டோமேட்டிக் ஸ்லைடிங் டோர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இரண்டாவது வரிசையில் கூலிங் மற்றும் ஹீட் வசதி கொண்ட இரண்டு கேப்டன் சீட்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர, டூயல் சன்ரூஃப் மற்றும் 360 டிகிரி கேமரா, உள்ளிட்ட எக்கச்சக்க அம்சங்கள் வாரி வழங்கப்பட்டுள்ளது.
Latest Tamil News
வியட்நாமை தொடர்ந்து பிலிப்பைன்ஸ் சந்தையில் இந்த ஹூண்டாய் கஸ்டின் கார் வரும் அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. விரைவில் இந்தியாவிலும் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு வரும்பட்சத்திக் இன்னோவாவுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்.


வாசகர் கருத்து (1)

  • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

    விலை கூட இன்னோவாவுக்கு போட்டியாக இருந்தா தான் சரியா வரும்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement