பெங்களூரு; 'காவிரி பிரச்னை தொடர்பாக, கர்நாடக முதல்வர் சித்தராமையாவுடன், பேச்சு நடத்த வேண்டும்' என, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, பா.ஜ., ராஜ்யசபா எம்.பி., லெஹர் சிங் சிரோயா கடிதம் எழுதியுள்ளார்.
அவரது கடித விபரம்:
காவிரி நதி நீர் பங்கீடு விஷயத்தில், கர்நாடகாவின் அணைகளில் தற்போதைய தண்ணீர் இருப்பு, 70 சதவீதம் மழை பற்றாக்குறையை மனதில் கொண்டு, கர்நாடக - தமிழக முதல்வர்கள் அமர்ந்து பேசி, பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.
கர்நாடக அரசு, உள் நோக்கத்துடன் தண்ணீரை நிறுத்தி வைக்கவில்லை என்பதை, தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும். எங்கள் அணைகளில் நீர்மட்டம் குறைந்துள்ளது.
எங்கள் மாநிலத்தின், 70 சதவீதம் தாலுகாக்கள் வறட்சியால் பாதிப்படைந்துள்ளன.
குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் வசிக்கும், பணியாற்றும் லட்சக்கணக்கான தமிழர்கள் உட்பட, அனைவருக்கும் குடிநீர் அவசியம் என்பதை, தமிழக அரசு உணர வேண்டும். கடந்த 10 - 15 ஆண்டுகளாக மக்கள், மாநிலங்களுக்கு இடையே புலம் பெயர்வது வழக்கமாக உள்ளது.
எனவே நீரின் உரிமை குறித்து பேசும் போது, யதார்த்த சூழ்நிலை, புலம் பெயர்வையும் மனதில் வைத்து ஆலோசிக்க வேண்டும். காவிரி விவாதத்துக்கு, மனித நேய அடிப்படையில் தீர்வு காணுங்கள். இது தொடர்பாக, கர்நாடக முதல்வர் சித்தராமையாவுடன், நீங்கள் பேச்சு நடத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (35)
காவிரி தண்ணீரை கொடுப்பதும் கொடுக்காததும் சிவகுமார் நினைப்பது தான் நடக்கும் சித்து இனி வரும் காலங்களில் டம்மி தான்
தி மு க ஏன் ஒன்றும் செய்ய முடியவில்லை. எடுத்ததுக்கெல்லாம் மாநாடு எழுச்சி போராட்டம் உரிமை போராட்டம் என்பவர்கள் மக்களை திரட்டி அமைதியான ஒரு போராட்டம் டெல்லி ஜந்தர் மந்திரில் நடத்தக்கூடாது
99% வாக்குகளை neravethittaram மார் தட்டுகிறார், ஓகே இந்த தண்ணி பிரச்னையை solve பண்ணி தண்ணி வரவச்சிடுங்க உங்கள எப்பவுமே நாங்க சிஎம் ஆக்கறோம்.
எடப்பாடி சிஎம். ஆ இருந்திருந்தா எடப்பாடி பதவி விளக்கணும்னு சொல்லு கொடம் இங்கே தண்ணி எங்கேன்னு டான்ஸ் ஆடி இருப்பார் கையாலாகாத சிஎம்.
கொத்தடிமை