Load Image
Advertisement

மாநிலங்களுக்கு பா.ஜ., செயலர்கள் பயணம்; பழைய சூழல் இல்லை என எச்சரிக்கை

 BJP secretaries travel to states - warning that the old atmosphere is not there  மாநிலங்களுக்கு பா.ஜ., செயலர்கள் பயணம்; பழைய சூழல் இல்லை என எச்சரிக்கை
ADVERTISEMENT
சென்னை; லோக்சபா தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்க, பா.ஜ.,வின் எட்டு தேசிய பொதுச்செயலர்கள் நாடு முழுதும் சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர். '2014, 2019 தேர்தல்கள் போல சூழல் இல்லை' என, பா.ஜ., நிர்வாகிகளுக்கு, அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பா.ஜ., தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்து விடக்கூடாது என்பதற்காக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி, தி.மு.க., உள்ளிட்ட 28 கட்சிகள் இணைந்து, 'இண்டியா' கூட்டணியை உருவாக்கியுள்ளன.

இந்நிலையில், லோக்சபா தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து, கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசிப்பதற்காக, பா.ஜ., தேசிய பொதுச் செயலர்கள் அருண் சிங், கைலாஷ் விஜய்வர்கியா, வினோத் தாவ்டே, துஷ்யந்த்குமார் கவுதம், தருண்சுக், சுனில் பன்சால், பண்டி சஞ்சய், ராதாமோகன்தால் அகர்வால் ஆகிய எட்டு பேரும், நாடு முழுதும் சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர்.

மாநில வாரியாக கட்சி நிர்வாகிகளை சந்தித்து, ஆலோசனை நடத்தி வருகின்றனர். பெரும்பாலான மாநிலங்களில், இந்த ஆலோசனை கூட்டங்கள் நடந்து முடிந்துள்ளன.

கடந்த வாரம், தமிழகம், புதுச்சேரி பா.ஜ., நிர்வாகிகளுடன், லோக்சபா தேர்தல் குறித்து அக்கட்சியின் தேசிய பொதுச்செயலர் வினோத் தாவ்டே ஆலோசனை நடத்தினார்.

ஓட்டுச்சாவடி கமிட்டிகள் அமைப்பது, பிரசாரம், கூட்டணி, தேர்தல் பணிக்குழு, நிதி மேலாண்மை, சமூக ஊடக பிரசாரம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

அப்போது பேசிய, வினோத் தாவ்டே கூறியுள்ளதாவது:

கடந்த 2014, 2019 தேர்தல்கள் போல இப்போது சூழல் இல்லை. 10 ஆண்டுகள் தொடர்ந்து பா.ஜ., ஆட்சியில் இருப்பதால், ஆட்சிக்கு எதிரான மனநிலை கண்டிப்பாக இருக்கும். சிதறிக் கிடந்த எதிரிகள் அனைவரும், பா.ஜ.,வை தோற்கடிக்க வேண்டும் என்ற ஒற்றைப்புள்ளியில் இணைந்துள்ளனர்.

கட்சிகள் மட்டுமல்லாது, சில மத அமைப்புகள், வெளிநாட்டு சக்திகளும் பா.ஜ.,வை தோற்கடிக்க, தீவிரமாக வேலை செய்கின்றன.

இப்போதே சமூக ஊடகங்களில், பா.ஜ.,வுக்கு எதிரான பிரசாரம் அதிகரித்துள்ளது. எனவே, நாம் கொஞ்சம் அசந்தாலும் எதிரிகள் வெல்லக் கூடும். எனவே, மிகுந்த எச்சரிக்கை, விவேகத்துடன் தேர்தல் பணியாற்ற வேண்டும். சமூக ஊடகங்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


வாசகர் கருத்து (24)

 • Thetamilan - CHennai,இந்தியா

  ஒரு சான்ஸே கொடுங்கள் என்று நீண்ட நாட்களுக்கு மக்களிடம் பிச்சை எடுக்க முடியாது . போக பதாண்டுகால ஆட்சியில் நாடு சூறையாடப்பட்டுவிட்டது

 • DR Sanaathan Rakshak Sanga Nadar - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  போன பாராளுமன்ற தேர்தலில் ஓ பி எஸ் + இ பி எஸ் இணைந்த ஆ தி முக + பாஜக + இதர கூட்டணி இருந்தும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தான் கிடைத்தது. இப்போது பலவீன ஆ திமுக கூட்டு முறிந்து ஒரு வரப்ரசாதாரம் 39 தொகுதியும் பாஜக விற்கே

 • jayvee - chennai,இந்தியா

  இது இப்படி இருக்க நாம்தான் தமிழ்நாட்டுக்கு ராஜா என்று நம்பிக்கொண்டிருக்கும் ஒருவர இங்கே.. அடுத்த பிரதமர் நாந்த்தான் என்று நாடு விட்டு நாடு தாண்டி உளறிக் கொண்டிருக்கும் தையா சாமி அங்கே.. மொத்தத்தில் உண்மையை ஒத்துக்கொள்ளவும் ஒரு தில்லு வேண்டும்..

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  G20 ரீல் ஓட்டினது வேஸ்ட்டா?

 • kumar c - bangalore,இந்தியா

  பூனை குட்டி வெளியே வந்துருச்சு .

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்