Load Image
Advertisement

காலமும் மாறும்; காட்சிகளும் மாறும்!

Times also change; Scenes will change too! காலமும் மாறும்; காட்சிகளும் மாறும்!
ADVERTISEMENT
கடந்த, 4ம் தேதி ஆலங்குளத்தில் துவங்கி, 16ல் பழனியில் பாதயாத்திரையின் இரண்டாம் கட்டத்தின் நிறைவுப் பகுதி வரை, மக்களின் ஏகோபித்த ஆதரவு, தன்னார்வ பங்கேற்பு, மனம் திறந்த வரவேற்பு மலைக்க வைத்தது.

மீண்டும் 21ல்



விநாயகர் சதுர்த்தி மற்றும் கட்சியின் இதர பணிகளுக்காகவும், செல்லும் இடங்களில் எல்லாம் பெற்றிருக்கும் புகார் மனுக்களின் மீது நடவடிக்கை எடுப்பதற்காகவும், ஒரு சில நாட்கள் பணியாற்றிய பின், மீண்டும் அடுத்தகட்ட யாத்திரையை, வரும், 21ல் காங்கேயத்தில் துவங்கி, 28ம் தேதி மேட்டுப்பாளையம் வரை கொங்கு மண்டலங்களில் நடத்த உள்ளேன்.

இந்த பாதயாத்திரை பயணிக்கும் வழியில், கட்சிக்கு அப்பாற்பட்டு, பிரதமர் மோடியால் ஈர்க்கப்பட்டு, அதிக அளவில் மகளிரும், இளைஞர்களும் பங்கேற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இன்னும் சொல்லப் போனால், பாதயாத்திரை ஒவ்வொரு நாளும் நிறைவு பெறும் இடத்திலேயே, பா.ஜ.,வின் உறுப்பினர் சேர்க்கை முகாமும் நடந்தது.

பல கிலோ மீட்டர் துாரம் நடந்து வந்திருந்த போதும், நின்று கொண்டே நிறைவுரையை கேட்டபோதும், சோர்வுகள் ஏதும் இன்றி தங்களை பா.ஜ.,வில் இணைத்துக் கொண்ட மக்களின் தன்னார்வத்தை பார்க்கும் போது, இந்த மக்களுக்காக இன்னும் கூடுதலாக உழைக்க வேண்டும் என்ற மன உறுதியே ஏற்பட்டது.

கண்காட்சிக்காக அல்ல



மக்கள் என்றுமே உண்மைக்கும், நேர்மைக்கும், உழைப்புக்கும் தவறாமல் துணை நிற்கின்றனர். நடந்து கொண்டிருக்கும் இந்த பாதயாத்திரை, வெறும் கண்காட்சிக்காக மட்டும் நடக்கவில்லை.

எங்கும் ஊழல்; எதிலும் ஊழல் என்று, தமிழகத்தில் நடக்கும் ஆட்சியை மாற்ற வேண்டும் என்பதற்காக நடக்கிறது. சுயநலத்திற்காகவும் சுய லாபத்திற்காகவும் நடக்கும் தி.மு.க.,வை ஆட்சிப் பொறுப்பில் இருந்து துாக்கி எறிந்து, பிரதமர் மோடியின் நல்லாட்சியை, தமிழகத்தில் மலர செய்வதற்காக நடந்து வருகிறது.

பிரதமர் மோடியின் பிறந்த நாளுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில், 73 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.

எப்படி பிரதமர் நாட்டுக்காக உழைக்கிறாரோ, அதுபோல இந்த மணமக்களும், அவர்களின் வருங்கால சந்ததியினரும் நாட்டுக்கும், மக்களுக்கும், மொழிக்கும், சமூகத்திற்கும் செய்ய வேண்டிய தொண்டுகளை செய்து, சிறப்பெய்தி வாழ வேண்டும் என்று வாழ்த்தினேன்.

Latest Tamil News

உடைந்த கண்ணாடி



பிரதமர் மோடி, உலகம் முழுதும் தமிழ்மொழியின் பெருமையும் தொன்மையையும் எடுத்துக் கூறுவதோடு, இந்திய நாட்டின் பெருமையை உலக நாடுகள் மத்தியில் எடுத்துரைத்து வருகிறார்.

நடந்து முடிந்த, 'ஜி - 20' மாநாட்டில் பங்கேற்ற உலகத் தலைவர்கள், இந்தியாவின் மேன்மையை எண்ணி வியந்து போற்றி பாராட்டுகின்றனர். நம் பிரதமரை, தங்கள் வழிகாட்டியாக ஏற்றுள்ளனர்.

ஆனால், காங்., முன்னாள் தலைவர் ராகுல் நாட்டுப்பற்று இல்லாமல், தான் செல்லும் நாடுகள் எங்கும், இந்தியாவின் மீது அவதுாறு பரப்புகிறார். வெளிநாட்டவர்களே முகம் சுளிக்கும் வகையில், அவமானப்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இவரை முன்னிறுத்தி, எதிரணியில் உருவாக்கப்படும் கூட்டணி என்பது, உடைந்த கண்ணாடிகளை எல்லாம் ஒட்டி வைத்தாற்போல இருக்கிறது. மாற்றுக் கருத்துக்களைக் கொண்ட அத்தனை பேரும், 'இண்டியா' என்ற பெயரில் கூட, ஒற்றுமை இல்லாமல் தனித்தனியே பிரிந்து நிற்கும் கூட்டணி வாயிலாக தான் எப்படியாவது பிரதமராகி விடலாம் என, கனவு காண்கிறார், ராகுல்.

தமிழகத்தின் ஒவ்வொரு தொகுதியிலும் இருக்கும் மக்களை, அடுத்தகட்ட யாத்திரையில் சந்திப்போம்; அவர்களின் மனக்குமுறல்களை கேட்டு அறிவோம். காலமும் மாறும்; காட்சிகளும் மாறும். அப்போது, குடும்ப ஆட்சி இருக்காது. குறுமன்னர்கள் இருக்க மாட்டார்கள். மன்னர்களாக அரியணையில் மக்கள் இருப்பர்.



வாசகர் கருத்து (26)

  • MARUTHU PANDIAR - chennai,இந்தியா

    காஷ்மீர் பிரிவினைவாதி, அஸ்ஸாம் பிரிவினை வாதி என்கிறோமே, அண்ணாத்துரையும் அவரின் ஆசானும் அப்பட்டமான பிரிவினை வாதத்தை தானே செய்து வந்தார்கள்? அடைந்தால் தனி நாடு இல்லையே சுடுகாடு என்றெல்லாம் முழங்கியவர் தானே இவர்?அண்ணாதுரையின் நாடகங்கள், எழுத்துக்கள், பேச்சுக்கள் இவற்றில் நாட்டு முன்னேற்றத்துக்கு என்ன உள்ளது என்பதை அறிந்தோர் கூறலாம் அப்படீங்கறாங்க.++++

  • MARUTHU PANDIAR - chennai,இந்தியா

    இன்று திமுகவுக்கு மாற்றாக உள்ள சக்தி அதிமுகவுக்கு நிச்சயம் இல்லை+++அது மிகவும் பலம் குன்றி இருக்கிறது+++எம்ஜிஆர், ஜெயா பெயரை வைத்து கொஞ்சம் ஓட்டலாமே தவிர எவருக்குமே மக்கள் செல்வாக்கு கிடையாது என்பதை உணர்ந்து அளவோடு வாய் விட்டால் கொஞ்சம் தேற வாய்ப்புள்ளது++++.

  • MARUTHU PANDIAR - chennai,இந்தியா

    இந்த திராவிஷ குட்டையில் ஊறிய மட்டைகளின் நடுவே அவர்களின் ஊழல், சுயநலம், ஏமாற்றுத் தனம், அடாவடி, அராஜகம் இவற்றை சமாளித்து முன்னாளில் ஜென்டில்மேன் அரசியல் செய்த போது பா.ஜ என்ற கட்சியை தமிழகத்தில் எதனை பேருக்கு யாருக்குத் தெரியும்? இன்று தமிழக இளைஞர்கள் அண்ணாமலையின் பின்னால்++++++ஜென்டில்மேனாகவே தொடங்கிய போலீஸ் அதிகாரி இந்த மட்டைகளுக்கு எதிராக போலீஸ் அதிகாரியாக அரசியல் செய்தால் தான் வேலைக்கு ஆகும் ++++

  • MARUTHU PANDIAR - chennai,இந்தியா

    இன்னக்கி பழனிசாமி ஒற்றைத் தலைமை ஸ்டேட்டஸ் ஐ நீதி மன்றம் மூலம் போட்டிருக்கலாம்,, ஆனால் அவர் ஜெயலலிதாவுக்கு நிகரான தலைவர் கிடையாது,, இருந்திருந்தால் இப்படி தலைமையை மதிக்காமல் தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் காரன் போல் பேசித் திரிவாங்களா? அண்ணாமலையின் திறன், தெளிவு,, நேர்மை, குறிக்கோளில் பிடிப்பு ,, அணுகுமுறை இவை அனைத்துமே இவர்களுக்கு தொடக்கம் முதலே வேப்பங்காய் தான் என்பதை பல முறை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்+++இன்று ஊழல் திமுகவும் அதிமுகவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது++++

  • Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ

    தமிழகத்தின் எதிர் காலம் அண்ணாமலை அவர்களால் பிரகாசிக்கப் போகிறது. கடந்த ஐம்பத்தேழு ஆண்டுகளாக, திராவிட மாயையில் சிக்கி, தமிழர்கள் செய்த கருமத்திற்கு நன்றாகவே தண்டனை அடைந்து விட்டார்கள். இந்த மாயை நீங்கி, தமிழகம் மீண்டும் ஆன்மீக மண்ணாக மாறி, ஊழல், சாராயம், தரம் குறைந்த நிலைமை, அறிவின்மை போன்றவற்றிலிருந்து விடுபட்டு, இந்த மாநிலத்தை எல்லா விதத்திலும் முன்னேறியதாக மாற்றுவார்கள். திராவிடர்களின் சித்தாந்தம் ஒழியும் நேரம் வந்து விட்டது. மத மாற்ற கும்பல்களின் தந்திரம் இனிமேல் பலிக்காது. வாழ்க தமிழ் வாழ்க பாரதம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்