இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா, சர்ச் பார்க் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். அவர் சற்று மனஅழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு தனது அறையில் தூங்க சென்றவர், அதிகாலை 3 மணி அளவில், துப்பட்டாவால் பேனில் தூக்கு மாட்டியிருந்தார்.
வாசகர் கருத்து (14)
condolences to Vijay Antony. Om Shanthi to departed soul. Vijay Antony is a good person.
ஆழ்ந்த இரங்கல்கள். கல்வி, சுமையாகிவிடக் கூடாது.
மனோதத்துவ நிபுணரிடம் ஆலோசனை பெற என்ன தயக்கம்? விபரம் அறிந்தவர்கள் இப்படி இருந்தால் என்ன சொல்வது? "எனக்கு தெரியும் " என்ற எண்ணமா? பெற்றோர்களுக்கு ஒரு வேண்டுகோள்: தற்போதைய தலைமுறை குழந்தைகளிடம் "எனக்கு தெரியும்" என்ற எண்ணத்தை விட "எனக்கு தான் தெரியும்" என்ற எண்ணம் ஓங்கி உள்ளது. பெற்றோர் காட்டும் செல்லம் (பாசம் வேறு செல்லம் வேறு) அத்தகைய self-centric சிந்தனைகளை ஊக்குவிக்கிறது. பாசம் வையுங்கள், செல்லம் தராதீர்கள்.
மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஆழ்ந்த இரங்கல்கள். மன அழுத்தத்தை குறைக்க எவ்வளவோ வழிகள் உள்ளன. கோவில், யோகா, நண்பர்கள், நகைசுவை சினிமா, பட்டிமன்றங்கள் .... பெற்றோர்களும் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். மற்ற குழந்தைகளுடன் எப்போதும் ஒப்பீடு செய்யாதீர்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவமான திறமை (unique) இருக்கும்.
ஆழ்ந்த இரங்கல்கள் பெற்றவர்களிடம் தங்கள் பிரசனையை மனம்விட்டுப் பேசியிருக்கலாம்