Load Image
Advertisement

ஓட்டு ஒன்றுக்கு ஸ்டாலின் நிர்ணயித்துள்ள தொகை 30,000 ரூபாய்!

Stalin fixed the amount of 30,000 rupees per vote!   ஓட்டு ஒன்றுக்கு ஸ்டாலின் நிர்ணயித்துள்ள தொகை 30,000 ரூபாய்!
ADVERTISEMENT

உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:



ஏ.சிரில் சகாயராஜ், திருச்சியிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில், 2.23 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. ஒவ்வொரு கார்டிலும் நிச்சயமாக ஒரு பெண்மணி இருப்பார். அத்தி பூத்தாற்போல், 1,000 அல்லது, 2,000 குடும்ப அட்டைகளில் பெண்களின் பெயர்கள் இல்லாமல் இருக்கக் கூடும்.

திராவிட மாடல் அரசு, மொத்தமுள்ள கார்டுகளில் இருந்து, 1 கோடியே 6 லட்சத்து 50,000 பெண்களை தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு பெண்மணிக்கும் மாதந்தோறும், 1,000 ரூபாய் வீதம், 'உரிமைத் தொகை' வழங்கத் துவங்கியுள்ளது.

இந்த பயனாளிகளை எந்த அளவுகோல் கொண்டு தேர்ந்தெடுத்தனர் என்பதை திராவிட மாடல் அரசே அறியும். காரணம், சொந்த வீடும், காரும் வைத்துள்ளவர்களுக்கும் இந்த மகளிர் உரிமைத் தொகை கிடைத்துள்ளது.

வாக்காளர்களுக்கு, ஓட்டளிக்க பணம் கொடுப்பது நாடு விடுதலையான நாள் முதலாகவே நடந்து வருகிறது. வேட்பாளர்கள் பணம் கொடுப்பதும், வாக்காளர்கள் அதை பெறுவதும் தேர்தல் நடத்தை விதிகளின் படி குற்றம் என்று தேர்தல் கமிஷன் கதறிக் கொண்டிருந்தாலும், கொடுப்பதும், பெறுவதும் தங்கு தடையின்றி நடக்கவே செய்கிறது.

ஓட்டுக்கு பணம் கொடுப்பது இதுவரை இலை மறை, காய் மறையாக இருந்தது. திராவிட மாடல் அரசு, 'மகளிர் உரிமைத் தொகை' என்ற, 'லேபிள்' ஒட்டி சட்டபூர்வமாக்கியுள்ளது.

இதன்படி, ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் அமர்வதற்காக ஓட்டு ஒன்றுக்கு 1,000 - 2,000, இடைத்தேர்தல்களில், 5,000 - 10,000 ரூபாய் என்றிருந்ததை, திராவிட மாடல் அரசு, 60,000 ரூபாயாக உயர்த்தியுள்ளது.

இதை படிப்பவர்களுக்கு நகைச்சுவை போல தெரியலாம். ஆனால், நம் முதல்வர், மகளிர் உரிமைத் தொகையை, ஆட்சியில் அமர்ந்த நாள் முதலாக வழங்க இயலாததற்கு வருத்தம் தெரிவித்து இருக்கிறார்.

இன்னும் இரண்டரை ஆண்டுகள் ஆட்சி இருக்கிறது. மொத்தம், 30 மாதங்கள் என கணக்கிட்டால், 30 x 1,000 = 30,000 ரூபாய்- கேரண்டி என்றும் உத்தரவாதம் வேறு வழங்கி இருக்கிறார். ஆக, எதிர்வரும் தேர்தல்களில், ஓட்டு ஒன்றுக்கு ஸ்டாலின் நிர்ணயித்துள்ள தொகை 30,000 ரூபாய்.


வாசகர் கருத்து (65)

  • தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா

    எவ்வளவு பணம் கொடுத்தாலும், பிஜேபியை ஜெயிக்க முடியாது.

  • Gopal - Nalla Oor,யூ.எஸ்.ஏ

    aha 30000 crores of money being distributed to us only, who accused him :-)

  • S.Balasubramanian - Chennai,இந்தியா

    It is very ironic and disgusting that almost all the comments posted indicate that DMK is the only corrupt party India thereby conveying the false and absurd notion that all other parties are filled with good and honest people devoted to serve the country and the people. The wise people posting these comments conveniently forget that the parties they blindly support are more corrupt and many of the leaders of these political parties have been convicted for shameless scams and corruption related looting. People living in Glass houses should not throw stones at other people.

  • Abbavi Tamilan - Riyadh,சவுதி அரேபியா

    bjp காரங்க தானே கேட்டாங்க ஏன் இன்னும் உரிமை தொகை கொடுக்கலன்னு அதும் இரண்டு வருடம் முன்பே உள்ள அறியர் தொகையும் சேர்ந்து கொடுக்கணுமுன்னு சொன்னாங்களே... இவங்க சொன்ன வருடம் ரண்டு கோடி பேருக்கு வேலை கொடுத்தார்களா ?

  • Abbavi Tamilan - Riyadh,சவுதி அரேபியா

    ஒன்றிய அரசு உங்கள் கையில் தானே இரூகிறது, இது தவறு என்றால், இதை தடை செய்து ஒரு மசோதா கொண்டு வாருங்களேன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement