Load Image
Advertisement

நாயக்கர் கால கருப்பசாமி சிலை கண்டெடுப்பு 

 Discovery of Karuppasamy statue of Nayak period    நாயக்கர் கால கருப்பசாமி சிலை கண்டெடுப்பு 
ADVERTISEMENT
மதுரை: மதுரை கண்ணனேந்தல் பறையாத்திகுளம் கண்மாய் அருகே பழங்கால கருப்பசாமி சிலை கண்டெடுக்கப்பட்டது. தண்ணீரில் மூழ்கிக் கிடந்த இச்சிலை பொதுமக்கள் கண்ணில்பட, வருவாய்த்துறையினர் மீட்டு கலெக்டர் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர்.

பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளர் முனீஸ்வரன் கூறியதாவது:

கிராம வழிபாட்டில் கருப்பசாமி வழிபாடு முக்கியமானவை. பெண் தெய்வங்களின் காவல் தெய்வமாகவும், விளைநிலங்களின் காவல் தெய்வமாகவும் வழிபடுகின்றனர். கருப்பு என்னும் சொல்லுக்கு வறுமை, பஞ்சம் என்னும் பொருள் உண்டு. கருப்பணசாமி என்னும் பெயர் கருப்பசாமி எனவும் வழங்கப்படுகிறது.

கண்டறியப்பட்ட கற்சிலையானது நின்ற கோலத்தில் தலையில் பெரிய தலைப்பாகை, நெற்றியில் திருமண், மிரட்டும் விழிகள், முறுக்கிய மீசை, ஓங்கிய கையில் வீச்சரிவாள், மறு கையில் சங்கு, இடுப்பில் கச்சை என வடிவமைக்கப்பட்டுள்ளது. இச்சிலை நாயக்கர் காலத்தை சேர்ந்தவையாக இருக்கும். முழுமையான ஆய்வுக்கு பின்னரே தெரியவரும், என்றார்.


வாசகர் கருத்து (3)

  • ranjan - சென்னை ,இந்தியா

    நாயக்கருக்கு கருப்பசாமிக்கும் என்ன சம்பந்தம்

    • தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா

      மைய அரசு மட்டுமே நாயக்கர்களுடையது ....பாளையப்பட்டுக்கள் , தெலுங்கர்கள் தவிர மற்ற சாதியாராலும் ஆளப்பட்டு வந்தன ....அவர்களது காவல் தெய்வம் கருப்பர் ...ஆகவே , கறுப்பர் சிலைகள் , நாயக்கர் கலைப்பாணியில் [அந்த காலகட்டத்தில் நிலவிய ஒரு ஸ்டைலில் ] வடிக்கப்பட்டிருக்கலாம் ..

  • Bye Pass - Redmond,யூ.எஸ்.ஏ

    நம்ம திராவிட நாட்டாமை நாயக்கரோன்னு நெனச்சேன் ..

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement