முறையாக வேக வைக்காமல் சாப்பிடும் போது உயிர்கொல்லியாக மாறி விடுவதால், இதுபோன்ற சம்பவங்கள் ஏற்பட்டு வருகின்றன. மேலும், தமிழகத்தில் மாதிரிகளை பரிசோதிக்க போதிய அளவில், பகுப்பாய்வு கூடங்கள் இல்லை. ஒரு மாதிரியை சேகரிக்க அனுப்பினால், 10 முதல் 15 நாட்கள் வரை ஆகிறது. இதுபோன்ற பல்வேறு காரணங்களால், உணவின் தரத்தை உறுதி செய்வதில், அதிகாரிகளுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மாநிலம் முழுதும் இறைச்சி கடைகள் மற்றும் அசைவ உணவகங்களில் சோதனை செய்யவும், அவர்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கவும், மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு, தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது.
உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது: இறைச்சியை பொறுத்தவரை பதப்படுத்துவது மிக முக்கியம். ஒரு பாத்திரத்தில் இறைச்சியை வைத்து, வீட்டில் இருக்கும் குளிர்சாதன பெட்டியில் வைத்து, மறுநாள் அரைகுறை தீயில் சமைத்து சாப்பிட்டால் ஆபத்தாக மாறி விடும். அதுபோல, பெரும்பாலான உணவகங்களில் செய்கின்றனர். இறைச்சியை, பிளாஸ்டிக் கவரில் காற்று புகாதவாறு அடைத்து, அதற்கேற்ற குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டும். அப்போது தான், அவை கெட்டு போகாமல் இருக்கும்.
அதேபோல், இறைச்சிக்கு அனைத்து பகுதிகளுக்கும் தீ பரவ வேண்டும். ஷவர்மா போன்ற உணவு பொருட்கள், குறைந்தது ஐந்து மணி நேரம் வெளியே கம்பியில் சுற்றி வைக்கப்பட்டிருக்கும். அவற்றில் பாக்டீரியா தொற்றுகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. அதற்கேற்ப அனைத்து இறைச்சி பகுதிகளுக்கும் தீ பரவும் வகையில் இருக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான ஹோட்டல்கள் அவற்றை பின்பற்றுவது இல்லை.
இவற்றை தடுக்கும் வகையில், அனைத்து இறைச்சி கடைகள், அசைவ உணவகங்களில் ஆய்வு செய்து, அவர்கள் முறையாக இறைச்சியை பதப்படுத்துகின்றனரா என்பதை சோதனை செய்ய, மாவட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (8)
கல்லா கட்ட கிளம்பிட்டானுக ..வேற ஒன்னும் இல்ல தீவாளி வருது ...வசூல் பண்ணனும் ,,கப்பம் மேலிடத்துக்கு அனுப்பனும் அதுல கொஞ்சம் சில்லறைகளை நமக்கும் கிடைக்கும்
இதுக்கு ஒரு சாவு விழணும் அப்புறமுடன் ஸ்டேப் எடுப்பானுங்க
idhu
உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இருக்கின்றார்களா? எவ்வளவு டீ கடைகளில் கலப்பட டீ தூள் உபயோகிக்கப் படுகின்றது. எவ்வளவு உணவகங்களில் தரமற்ற எண்ணெய்கள் உபயோகிக்கப்படுகின்றது. ரெடிமேடு மசாலாக்களில் எவ்வளவு ஆபத்தான பொருட்கள் உள்ளன? 200 ரூபாய்க்கு காரவகைகள் 300 ரூபாய்க்கு இனிப்புவகைகள் எத்தனையோ கடைகளில் விற்கப் படுகின்றன. அவைகள் தரமானதா? எத்தனை சாலையோர உணவகங்கள் மாற்று சிறிய ஹோட்டல்களில் சுகாதாரமற்ற முறையில் உணவுகள் தயாரிக்கப்படுகின்றது? உணவை தயாரிப்பவர்களுக்கு தகுந்த இடைவெளியில் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டதா? இவை எதையுமே கண்காணிக்கப்படுவதாக தெரியவில்லை . எங்காவது இதுபோல அசம்பாவிதங்கள் நடந்தபிறகு இங்கொன்றும் அங்கொன்றுமாக சோதனைகள் சில நாட்கள் நடத்தப்படுகின்றது.
கீழ் மட்ட திமுக பிரமுகர்கள் நல்லா வசூல் செய்து வருகிறார்கள். இப்போ அதிகாரிகளுக்கு செமத்தியான வசூல். எவன் செத்தா என்ன. திமுகவினருக்கு பணமே பிரதானம்.