Load Image
Advertisement

நள்ளிரவில் விநாயகர் சிலை நடுரோட்டில் வீசி உடைப்பு; வாழப்பாடியில் பரபரப்பு

Vinayagar Chaturthi 2023: Ganesha idol thrown in the midnight and broken  நள்ளிரவில் விநாயகர் சிலை நடுரோட்டில் வீசி உடைப்பு; வாழப்பாடியில் பரபரப்பு
ADVERTISEMENT
வாழப்பாடி: வாழப்பாடியில் நள்ளிரவில் விநாயகர் சிலை நடுரோட்டில் வீசி உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி டவுன் பஞ்சாயத்து பகுதியில் 5வது வார்டில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 3 அடி உயரத்தில் விநாயகர் சிலை, பந்தல் அமைத்து வைக்கப்பட்டிருந்தது. இந்த விநாயகர் சிலையை, நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் மர்ம நபர்கள் தூக்கி சென்று, நடுரோட்டில் வீசி உடைத்து விட்டு சென்றுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த பா.ஜ., சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் சண்முகநாதன், மாவட்ட இளைஞரணி தலைவர் குணா மற்றும் பலர் அப்பகுதியில் திரண்டனர். இது குறித்து தகவல் அறிந்த வாழப்பாடி போலீசார் அப்பகுதிக்கு சென்று, விநாயகர் சிலையை நடுரோட்டில் வீசி உடைத்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை சோதனை செய்து வருகின்றனர்.

வாழப்பாடி பகுதியில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வைக்கப்பட்ட விநாயகர் சிலை நடுரோட்டில் வீசி உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Latest Tamil News
இது குறித்து சேலம் கிழக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் சண்முகநாதன் கூறுகையில்: வாழப்பாடி பகுதியில் 5வது வார்டு சடையப்பர் தெருவில் பா.ஜ., இளைஞர் அணி தலைவர் குணா மற்றும் அப்பகுதியினர் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு, விநாயகர் சிலை வைத்துள்ளனர். இச்சிலையை பைக்கில் வந்த 3 பேர் கொண்ட அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், இந்து விரோத சக்திகள் சிலையை எடுத்துச் சென்று, தூக்க முடியாமல் நடுரோட்டில் வீசி உடைத்துள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் இருக்க உடனடியாக மர்ம நபர்களை கண்டறிந்து கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்.

இன்று மாலைக்குள் கைது செய்ய வேண்டும். அப்போதுதான், நாளை வாழப்பாடி பகுதியில் நடைபெற உள்ள ஊர்வலம் சுமூகமாகவும், அமைதியாகவும் இருக்கும். இது மதத்தின் உணர்வுகளை தூண்டக் கூடியதாக உள்ளது. இதை ஏற்க முடியாது. இது திட்டமிட்டு ஒரு சில வினாடிகளில் செய்துள்ள சதி செயல் என தெரிகிறது. என தெரிவித்தார்.


வாசகர் கருத்து (26)

  • பேசும் தமிழன் -

    திருட்டு திராவிட மாடல் ஆட்சியில் ...இறைவன் சிலைக்கு கூட பாதுகாப்பில்லை.

  • கல்யாணராமன் மறைமலை நகர் -

    கவலை வேண்டாம். விடியலின் ஏவல் துறை தீவிரமாகத் துப்புத் துலக்கி!? இதைச் செய்தது மனநலம் பாதிக்கப்பட்ட நபர்கள் என்று கண்டுபிடித்து விடுவார்கள்.

  • Rajathi Rajan - Thiravida Naadu,இந்தியா

    கடைசில் உண்மை வரும் .....அது என்னனா அவர்களுக்குள் கோஷ்டி பூசலால் கூட இருந்தவர்களே இப்படி பண்ணிடு பழி யா அடுத்தவர்கள் மேல் போடுவது.... இது போல தானே பலமுறை தீ பிடித்து எரிந்து இருக்கு.,.

  • Raa - Chennai,இந்தியா

    எவனாவது 3 பெயர் வந்து சரண் அடைவார்களே..... திருடர்களுக்கு சொல்லியா கொடுக்கணும்

  • அப்புசாமி -

    எங்க ஊரில் இது மாதிரி நடக்ஜலாம்னு தெரிஞ்சுதான் நாலு பேரை புள்ளையார் சிலைக்கு ராவு முழுவதும் காவல் போட்டிருக்கோம். அங்கே காவல் போடலியா, இல்லே காவல் காத்தவர்கள் மட்டையாயிட்டாங்களா?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்