Load Image
Advertisement

முதல் திருமணத்தை மறைத்த மனைவி கழுத்தறுத்து கொலை

 Wife who concealed her first marriage was strangled to death    முதல் திருமணத்தை மறைத்த மனைவி கழுத்தறுத்து கொலை
ADVERTISEMENT
ஆவடி: ஆந்திராவைச் சேர்ந்தவர் ஆமோஸ், 32. இவரது மனைவி சாரம்மாள், 26. இரு மகன்கள் உள்ளனர்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன், இருவரும் பிரிந்தனர். சாரம்மாள் குழந்தைகளுடன், அம்பத்துாரில் உள்ள அவரது தாய் வீட்டில் தங்கியிருந்தார்.

இந்நிலையில், ஆவடி நந்தவன மேட்டூரைச் சேர்ந்த, அம்பத்துார் மாநகராட்சி ஒப்பந்த துாய்மை பணியாளர் ஜான்சன், 29, என்பவருடன், சாரம்மாளுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ஐந்து மாதங்களுக்கு முன் இருவரும் திருமணம் செய்து கொண்டு, ஆவடி, ஜீவா நகர், சின்னம்மன் கோவில் தெருவில் தனியாக வீடு எடுத்து தங்கினர்.

சாரம்மாள் முதல் திருமணத்தை மறைத்து தன்னை திருமணம் செய்து கொண்டது, ஜான்சனுக்கு தெரிந்தது. இதனால் தகராறு ஏற்பட்டு வந்தது. வழக்கம்போல் கடந்த 16ம் தேதி, தகராறு ஏற்பட்ட போது, ஜான்சன் கத்தியால் சாரம்மாள் கழுத்தில் குத்தி கொலை செய்து, கோணி பையில் கட்டி மறைத்து வைத்துள்ளார்.

இதையடுத்து இரண்டு நாள் கழித்து, நேற்று மாலை ஆவடி போலீசில் ஜான்சன் சரணடைந்தார். போலீசார், சாரம்மாள் உடலை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement