Load Image
Advertisement

பால் பொருட்களில் கலப்படம்: தடுப்பதற்கு ஆய்வு துவக்கம்

Adulteration in Dairy Products: Research Initiative for Prevention   பால் பொருட்களில் கலப்படம்: தடுப்பதற்கு ஆய்வு துவக்கம்
ADVERTISEMENT
கோல்கட்டா: கலப்படம் செய்வதைத் தடுக்கும் விதமாக நாடு முழுதும் பால் மற்றும் பால் பொருட்களை கண்காணிப்பு ஆய்வு செய்யும் பணியை, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் நேற்று துவங்கியது.

பால் மற்றும் பால் பொருட்களில் கலப்படம் செய்யப்படுவதை தடுக்கும் விதமாக, அவ்வப்போது பால் மற்றும் அதன் வாயிலாக தயாரிக்கப்படும் பொருட்களை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் நாடு முழுதும் ஆய்வு செய்து வருகிறது. இந்த ஆண்டுக்கான சோதனை நேற்று துவங்கியது.

இது குறித்து இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் ஆலோசகர் சத்யன் கே பாண்டா கூறியதாவது: உணவு பொருட்களில் பாலின் பங்கு மிகவும் இன்றியமையாதது. அதை பயன்படுத்தும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி நாடு முழுதும், 766 மாவட்டங்களில் பால் மற்றும் பால் பொருட்கள் மீது கண்காணிப்பு ஆய்வு மேற்கொள்ள உள்ளோம். வணிக நிறுவனங்கள், உணவகங்கள் என பல இடங்களில், 10,000க்கும் மேற்பட்ட மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்ப உள்ளோம்.

வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள, 'குவாலிட்டி கவுன்சில் ஆப் இந்தியா' தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் ஆகிய இரண்டு நிறுவனங்கள் இந்த ஆய்வை மேற்கொள்ளும். பால், கோவா, சென்னா, நெய், வெண்ணெய், தயிர், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பொருட்களில் சோதனை நடத்தப்படும்.

பாலின் தரம், பொருட்களில் சேர்க்கப்பட்ட பொருட்கள், அதன் அளவுகள், மாசுபடுத்துதல், ஆன்டிபயாடிக் எச்சங்கள் ஆகியவையும் ஆய்வு செய்யப்படும். அடுத்த மாதம் வரை நடக்கும் கண்காணிப்பு ஆய்வின் முடிவுகள் குறித்த அறிக்கை வரும் டிசம்பரில் சுகாதார அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து (2)

  • V.Saminathan. - ,

    இப்படியே இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலைகளுள்ள கேரள/மராத்திய பசு எருமை விற்பனை பொருட்களின் தரம் நிர்ணயம் செய்யப்பட்டால் நல்லது-இல்லையேல் பசுக்களின் எண்ணிக்கை குறைந்து அரிய வகை மிருக லிஸ்டில் அஙை சேர்வது அதிகமாகும்-அதிலும் இட ஒதுக்கீடு இல்லாது பசை காளை எருமை கிடரி என பேதமின்றி இருத்தல் நலம்.

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    தமிழகத்தில் இது வேலை செய்யுமா அல்லது செய்யாதா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்