Load Image
Advertisement

மைக்கை அணைக்க தானியங்கி வசதி: புதிய பார்லி.,யில் அதிநவீன அம்சங்கள்

 Automatic mic-off facility is the most advanced feature in the new Barley   மைக்கை அணைக்க தானியங்கி வசதி: புதிய பார்லி.,யில் அதிநவீன அம்சங்கள்
ADVERTISEMENT
புதுடில்லி: புதிய பார்லிமென்ட் கட்டடத்தில், எம்.பி.,க்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் பேசி முடித்தவுடன், 'மைக்' தானாகவே அணைக்கப்படும் வகையில், தானியங்கி வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

ஆங்கிலேயர் காலத்து பார்லி., கட்டடத்துக்கு விடைகொடுக்கும் வகையில், அதனருகே, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ., அரசு, அதிநவீன வசதிகளுடன், புதிய பார்லி., கட்டடத்தை கட்டி உள்ளது.

இந்நிலையில், பழைய பார்லி., கட்டடத்தில், சிறப்பு கூட்டத்தொடரின் முதல் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இன்று முதல் வரும் 22 வரை, புதிய பார்லி., கட்டடத்தில் சிறப்பு கூட்டத்தொடர் நடக்க உள்ள நிலையில், அங்கு பல்வேறு நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, புதிய பார்லிமென்ட் காகிதமற்றதாக இருக்கும். இதற்காக, அனைத்து எம்.பி.,க்களின் இருக்கை முன், டேப்லெட் கம்ப்யூட்டர் இருக்கும். இதில், சபை அலுவல்கள் குறித்த தகவல்களை எம்.பி.,க்கள் தெரிந்து கொள்ளலாம். மேலும், பத்திரிகையாளர்கள் உள்ளே செல்ல கடுமையான விதிமுறைகள் உள்ளன. புதிய பார்லி., கட்டடத்தில், ஆறு நுழைவாயில்கள் உள்ளன. இவற்றுக்கு, யானை, கருடன், கழுகு என, உயிரினங்களின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன.

சபையில் பேசும் போது, 'மைக்' அணைக்கப்படுவதாக எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் குற்றம் சாட்டுவது, அரசுக்கு மிகப்பெரிய பிரச்னையாக இருக்கிறது. இதை சரிசெய்யும் பொருட்டு, புதிய பார்லி.,யில் உள்ள இரு சபைகளிலும், 'மைக்' அணைக்கப்படுவதற்கு, தானியங்கி வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இதன்படி, ஒதுக்கப்பட்ட நேரத்தில் எம்.பி., பேசி முடித்த பின், 'மைக்' தானாகவே அணைக்கப்பட்டு விடும். இது போன்ற பல்வேறு நவீன வசதிகள், புதிய பார்லி.,யில் செய்யப்பட்டு உள்ளன.


வாசகர் கருத்து (6)

  • அப்புசாமி -

    அப்படியும் அடங்காமல் சத்தம்.போடுபவர்களை சபநாயகர் நினைத்தால் வாயை அடைக்குற பந்து ஒன்றை வீசும் வசதியும் செய்திருக்க வேண்டும். பிறகு சபாநாயகரின் இருக்கைக்கு வந்து கூச்சல் போடாமல் இருக்க இருக்கையிலேயே கட்டிப் போடும் வசதியும் வேண்டும்.

  • Varadarajan Nagarajan - டெல்டாக்காரன்,இந்தியா

    இது நவீன யுகம். புதிய இந்தியாவை மோடி கட்டமைக்கின்றார். இது காலத்தின் கட்டாயமும் அத்தியாவசியமும் கூட. இதில் மோடியை குறை கூற என்ன இருக்கின்றது?

  • Mani . V - Singapore,சிங்கப்பூர்

    எதிர் கட்சிகள் தங்களுடைய கருத்தையோ, எதிர்ப்பையோ தெரிவிக்க முடியாது. வாழ்க ஜனநாயகம்.

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    ஓவராக பேசினால் தலையிலடித்து உட்கார வைக்க முடியாது என்பதால் தானாகவே இயங்கும் மைக்...வளவள ஆசாமிகளை கட்டுப்படுத்த சிறப்பான ஏற்பாடு.

  • V.Saminathan. - ,

    செயற்கை நுண்ணறிவு பொருந்திய சென்சார் இணைந்துள்ளதோ-சிப் டீகோடி பொய்த்தால் யாரைக் குறை கூறுவது?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement